Tuesday, June 1, 2010

கல்லாய் நீ

கழுத்தில் தாலியும் ,
இடுப்பில் அரைமூடியும்
மட்டுமே அணிந்தபடி
நளினமாய் தான் நிறுத்தப்பட்டிருக்கிறாய் நீ....

போற்றி போற்றி என்று
மெய் மறந்து பாடியபடி
கரம் கூப்பி அமர்ந்திருக்கின்றனர்
எதிரே எத்தனையோ பெண்கள்.....

எண்ணெய் தடவிவிட்டு
மஞ்சள் முழுக்காட்டி
எத்தனையோ திரவங்களால்
நீ மூச்சு திணற,
குளிரால் விறைக்க
உன்னை குளிப்பாட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.....

எனக்கென்னவோ
உடலே கூசுகிறது.....
என்ன தான் நீ கல்லாய் நின்றாலும்
அர்ச்சகர்கள் ஆண்கள்ஆயிற்றே ......

கிருஷ்ணப்ரியா

(நன்றி: சௌந்தர சுகன்)

12 comments:

  1. வணக்கம் தோழி... சுகனில் இக் கவிதை படித்த போதே நிறைந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. வாழ்த்துகள்!

    ReplyDelete
  2. வோர்ட் வெரிபிகாஷனை எடுத்து விடுவது நலம்... பின்னுட்டமிடுபவர்களுக்கு வசதியாக இருக்கும்.

    ReplyDelete
  3. சுகன்ல எழுதுவீகளே? அவுகளா நீங்க?

    ReplyDelete
  4. கவிதை நல்லா இருக்கு.

    ReplyDelete
  5. நன்றி நிலா... விரைவில் நீக்கிவிடுகிறேன்...

    ReplyDelete
  6. அதே கிருஷ்ணப்ரியா தான்.... உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி மரா...

    ReplyDelete
  7. super kavithai...oru pennin parvaiyil irunthu miga arumayaga vanthullathu :)

    ReplyDelete
  8. மாறுபட்ட சிந்தனை ப்ரியா நவீனக் கவிதை செல்ல வேண்டிய தூரத்தையும் , அதன் அவசியத்தையும் நியாயப்படுத்துகிற கவிதை . உங்கள் கவிதைகளை அதிகம் வாசிக்க வைத்த கவிதை . அருமை... தொடருங்கள்

    ReplyDelete
  9. சுகனில் நான் அச்சாக்கிய கவிதைதான். உனர்வுப் பொங்கும் கவிதை. கவிதையின் அசல் சூட்டோடு இன்னும் எழுதுங்கள்.

    - சுகன்

    ReplyDelete
  10. இத்தனை பேரும் விமர்சிக்கும் முன்னரே அச்சில் ஏறும் முன்னரே படித்து நான் கண் கலங்கிய கவிதை.சிறு வயதிலிருந்தே உன் கவிதைகளை ரசித்தவள்.மிகவும் அருமை

    ReplyDelete
  11. @ புஷ்பலதா

    நீ படித்து கண் கலங்கியபோதே அந்த கவிதைக்கு அதற்கான வெற்றி கிடைத்து விட்டது என்று நான் பெருமைப் பட்டேன். அது வீண் போகவில்லை. இந்த மாதம் ஒன்பதாம் தேதி இந்த கவிதைக்காக நான் "சுகன்' விழாவில் பரிசு வாங்கப் போகிறேன். முதல் நன்றி உனக்குத்தான்.

    ReplyDelete