Monday, December 12, 2011

இன்னும் இருக்கிறாள் அம்மா.....

(ஐ தமிழ் இணைய இதழில் வெளியான என் சிறுகதை இது.... இணைப்பு தந்தால் மட்டும் எப்படி? பதிவிடுங்கள் என்று என்னை செல்லமாய் வற்புறுத்தி என்னை பதிவிட வைத்த இனிய தோழி நிலா மகளுக்கு நன்றி......

 இணைப்பும் சிறுகதையும் கீழே....)

http://issuu.com/itamil/docs/ithamil_november_2011/28


வெகு நாளைக்குப் பிறகு அன்று அந்த பிரிவுபச்சார விழாவில்  ரேவதியைப் பார்த்தாள் இந்திரா... வாழ்வின் வேகமான ஓட்டத்தில் நண்பர்களை, உறவுகளை அடிக்கடிப் பார்ப்பது என்பது இயலாமல் போய்க் கொண்டிருக்கிறது...

Saturday, December 3, 2011

சிறுகதை


ஐ தமிழ் என்ற இணைய இதழில் என் சிறுகதை ஒன்று பிரசுரம் ஆகி யிருக்கிறது....


பக்கம் எண்
26 முதல்  30  வரை. ..... கீழே உள்ள இணைப்பில்


http://issuu.com/itamil/docs/ithamil_november_2011/28

Monday, September 19, 2011

வெகு நாட்களாக எதுவும் எழுத முடியவில்லை
என்ற சோகத்தைத் தீர்க்க, பல வருடங்களுக்கு முன் நான் என் இரண்டாவது
 பிரசவம் முடிந்து மகப்பேறு
 விடுப்பில் இருந்த போது,
 (இப்போது மகப்பேறு விடுப்பு ஆறு மாதம் ஆகியிருப்பது 
எத்தனை பெரிய 
ஆசுவாசம் என்பது
 மூன்று மாத
 மகப்பேறு விடுப்பை அனுபவித்த
 என் போன்றவர்களுக்குப் புரியும்)
 என் பிள்ளைகள் பெயரில் எழுதி குமுதம் சிநேகிதியில் வெளியான ஒரு கவிதை உங்கள் பார்வைக்கு........

Saturday, July 23, 2011

மொழியின் தீ......

ஒளிந்து கொள்கிறேன்
இந்த காதல் விளையாட்டில்
உன்னிடம் அகப்பட்டு விடக் கூடாதென்று......
என்றாலும்
சின்ன உதடுகளைத் திறந்து
நீ
செல்ல மொழிகளை உதிர்க்கையில்
தீப்பற்றிக் கொள்கிறது
என் அந்தப்புரம்..........
 
 
நன்றி; கல்கி வார இதழ்...
 

Thursday, July 7, 2011

ஊமை வலி........

கடிவாளத்தை இழுத்து குதிரையை நிறுத்துவதைப் போல
என் வாகனத்தை மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தினேன். 
குதிரைப்பயணம்  போல குதித்தபடி  இரு சக்கர வாகனத்தில்
 தினமும் வருவதே உடம்பை வருத்தும்
 அசதியைத் தருகிறது...அன்று காலையிலேயே 
மருத்துவமனைக்கு வந்திருந்த மக்கள் கூட்டம்
 அதிகமாய் பெரிய வரிசையாய் நின்றிருந்தனர்.
அந்த கூட்டத்தை பார்த்தவுடன் என் உடல் வலி
 என்னை பயமுறுத்திற்று. ஆனாலும் வேறு வழியில்லை...

இன்று கர்பவதிகளுக்கான சிறப்புப் பரிசோதனையும்,
மருத்துவமும் நடைபெறும் நாள்.

Sunday, June 19, 2011

அம்மா

அலுவலகத்திற்கும் வீட்டிற்குமாய்

ஓய்வில்லாது உழைத்து

அலுத்துக் களைத்துப் போகும்

எண்ணற்ற தருணங்களில்

எல்லோரிடமும்

சிடுசிடுக்கும் அம்மா

சீறுவதேயில்லை 

பத்துப்பாத்திரம் தேய்க்கும்

பத்மாவிடம் மட்டும்....


களித்துச் சிரித்திருக்கும்

எங்களுக்கான நேரங்களில்

காரணம் கேட்டால்

வீட்டிலும் வெளியிலும்

அவளும் தான் தேய்கிறாள்

என்னைப் போலவே.....

பதில் சொல்லும்

அம்மாவின் கண்களில்

எப்போதும் தெரிகிறது நெருப்பு......



நன்றி: கவண் இதழ்..

Saturday, June 18, 2011

,
மரங்கள் வெட்டப் பட்ட
அரளிகள் பூக்க முயற்சிக்கும்
மிக நீண்ட
சாலையொன்றில்
சூரியன் தகித்து இறங்கிக் கொண்டிருக்க
வெயிலால் சோர்ந்து நடந்து வந்தாள்
பொக்கை வாய் கிழவியொருத்தி...

தலைக் கவசம், இருக்கைக்கு துண்டு என்று
பறந்து வந்து கொண்டிருந்த
அந்த
இரு சக்கர வாகனம்
மெல்ல வேகம் குறைத்து
அவளை பின்னால் இருத்தியபடி
பயணத்தைத்  தொடர்ந்தது....

வெயிலுக்கு பயந்து
எங்கோ ஒளிந்திருந்த
கடவுளும்
சேர்ந்து பயணித்தான்
அந்த தலைக் கவசத்துக்குள்
தன்னை மறைத்தபடியே.....


நன்றி: கல்கி வார இதழ்... 

Thursday, June 16, 2011

அவளும், அவளும்.....

சரசரக்கும் பட்டுப்புடவை
பளபளக்கும் அணிகலன்கள்
விதவிதமாய் பூக்கள் என்று
அவளை
பகட்டாக அலங்கரித்து
அவள் அங்கே இருப்பதாக நம்பி
ஏதோ ஒரு விழா
கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்......

அவளோ
விழா முடிந்த பிறகு
நடக்கப்போகிற
அன்னதானத்திற்காய்
பசியோடு காத்திருக்கும்
பிள்ளைகளின் நடுவில்
ஓடி விளையாடுகிறாள்
பாவாடைச் சிறுமியாக......


நன்றி; கவண் இதழ்..

Tuesday, May 31, 2011

 
 
 
இன்று அமிர்தம் சூர்யாவின் வலைப்பூவைப் பார்த்தேன். அதில் என் மனம் கவர்ந்த ஒரு கவிதை உங்கள் பார்வைக்கு......
 
 
 
 
 
 
 
 


(வார்த்தையாயிருக்கும் நெகட்டிவ் ஃபிலிம்மை,
நீங்கள் வாழ்க்கையில் பிரிண்ட்எடுத்துப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள் ஆல்பத்தை...)
படம்: ஒன்று
ஏய் கருப்பி!
கருடன் சுத்தறான் உஷாராயிரு!
புள்ளைங்கள அந்தப்பக்கம் கூட்டிட்டுப் போடி
பொரித்த குஞ்சுகளோடு குப்பையைக்
கிளரும் கருத்த கோழியோடு
பேசிக் கொண்டிருக்கிறாள் ஆயி.
படம்: இரண்டு
பாஞ்சாலி வேஷம் கட்டும்
கூத்துக்காரரின் காய்ச்சலுக்கு
கஷாயமும் கஞ்சியும்
கொடுத்தனுப்பியதைக் கண்டித்தபோது,
கலை செத்த ஊர்ல
காலந்தள்ள முடியாதய்யா
வெறும் வயிறோடு நடிச்சா
பாஞ்சாலி வயிறு எரியுமில்ல” -
புத்தியில் சாந்தம் பூசினாள் ஆச்சி.
படம்: மூன்று
கோவில் தேர் பிரச்னையால்
கூடிய பஞ்சாயத்தில்
சொந்தமாய் தேர் செதுக்கும்
யோசனை, விதையாய் வீழ்ந்தபோது...
ஏண்டா! உன் வயல்ல மழை பெய்ய
சொந்தமா மேகத்தை உனக்குன்னு செய்வீயா
பெய்யும் மழையை பொதுவாக்கப் பாருடா
- முளைத்த நெருப்பின் துளிரை
பிடுங்கிப் போட்டாள் ஆயா.
படம்: நான்கு
துயர நீரில் மூழ்கியிருக்கும் தன் கண்களோடு
காத்தவராயன் மனைவிக்கு
சுகப்பிரசவம் முடித்து,
உரமாய் ஆசியை மனத்தில் தூவிவிட்டு...
மரித்த பேரனுக்காய் மார்பில் அடித்து அழ,
நடையை ஓட்டமாய் மாற்றுகிறாள் பாட்டி.
படம்:ஐந்து
உருமாறுற தேவதைங்க
இப்ப ஏன் இல்ல?”
மடிமெத்தையில் தலை சாய்த்து
கதை கேட்கும் பேத்திக்கு
இல்லேன்னு யார் சொன்னா
நீ... உங்கம்மா... நானு கூடத்தான்
தேவதை. மனுஷ ரூபத்தில் இருக்கோமில்லே?”
- அரக்க சாயலை அடியோடு
தூர்வாறுவாள் அப்பத்தா.
கடவுளின் ரேகையை
முகங்களில் சுருக்கங்களாய்
பதியமிட்டிருக்கும்
பழுத்த பெண்மையை -
ஆச்சி, ஆயி, ஆயா, பாட்டி,
அப்பத்தா... எப்படி அழைத்தாலும் சரி.
பூமியைச் சுழற்றி விடும்
சூட்சுமத்தை அவர்களிடம்
ஒரு கணமேனும்,
உணர்ந்ததுண்டா - ஆம்எனில்
ஆல்பத்தை பார்த்துக் கொண்டிருக்கும்
நீ பாக்யவான்.
குறிப்பு: இப்போது உனது
குல தெய்வங்களை இதில் சேர்த்துக் கொள்ளலாம்.
- அமிர்தம் சூர்யா
(c) suryakalki@gmail.com

தெளிவாயிட்டேன்

தஞ்சை நகரத்திலிருந்து சுமாராக ஒரு இருபது கிலோமீட்டர் தூரத்தில்
 இருக்கும் அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் எனக்கு மருந்தாளுநராக
 பணி. மருந்தாளுனர் என்றால் நோயாளிகளுக்கு மருந்து வழங்குவது
 முதன்மையான பணி..... துணை நிலை பணி என்ன என்று கேட்டு விடக்
 கூடாது, அது ஒரு பெரிய பட்டியல்.


சரி அதை விடுங்கள்.... நான் சொல்ல வந்த சேதியே வேறு.....


மருத்துவமனையில் அன்று நல்ல கூட்டம். வாரத்தில் ஒரு நாள் மட்டும்
 இரத்தக் கொதிப்பு, நீரிழிவு  நோய்க்கு என்று சிறப்பு மருத்துவமும்,
மருந்துகளும் வழங்கப் படும். அதை வாங்குவதற்காக
 வருகின்ற மக்கள்  கூட்டம். அன்று மட்டும் சுமாராக நானூறு பேராவது
 வருவார்கள். நான்  (மட்டும் தான்)பர பரப்பாக மருந்துகளை வழங்கிக்
 கொண்டிருந்தேன்.  படிப்பறிவில்லாத வயதானவர்களே அதிகம் அந்த
 கூட்டத்தில். இது இரத்தக் கொதிப்புக்கான மாத்திரை, இது சர்க்கரைக்கு,
 இது சத்து மாத்திரை என்று சொல்லியபடியே கொடுத்துக்
கொண்டிருந்தேன். இடையில் மருத்துவர் அழைப்பதாக செய்தி வந்தது.
 கூட்டத்தை நிற்க வைத்துவிட்டு அங்கே போனேன்.

"அம்மா, நீங்க இந்த பேஷண்ட்ஸ் கிட்டே,  சக்கரை வியாதி, இரத்தக்
 கொதிப்புன்னெல்லாம் சொல்லாதீங்க, இங்கே பாருங்க அவங்களுக்கு
 புதுசா ஒரு வியாதி வந்துட்டதா நினச்சு என்கிட்டே வந்து கேள்வி
 கேக்கறாங்க, பிரஷர், சுகர்  அப்படின்னே சொல்லுங்க. அப்போ தான்
 அவங்களுக்கு புரியும்"  மிகவும் தீவிரமான முகத்தோடு சொன்னார்
 மருத்துவர். எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. சரி
 என்று சொல்லிவிட்டு வந்து என் பணியை தொடர்ந்தேன். "இது பிரஷர்
 மாத்திரை, இது சத்து மாத்திரை, இது வலிக்கு" என்று சொல்லி கொடுத்த
 என்னிடம் அந்த தாத்தா கேட்டார், "எப்போ சாப்பிடனும்மா? " " இந்த
 மாத்திரை காலையில சாப்பிடுங்க, . இது ராத்திரிக்கு சாப்பிடுங்க "
கண்களை இடுக்கியபடி அவர் மறுபடி  கேட்டார்,  "இது பகல்ல, இது நைட்டுக்கு , அப்படி தானே?"

எனக்கு இப்போதும் என்ன சொல்வதென்று தெரியவில்லை..... அடுத்து
 வந்த நோயாளிகளிடம் எல்லாம் நான் தெளிவாக கூற ஆரம்பித்தேன்,
 இந்த பிரஷர் மாத்திரை பகல்ல, சத்து மாத்திரை நைட்ல"


நான் தெளிவாயிட்டேன்..... அப்போ நீங்க....?

Monday, May 23, 2011

வேறு வேறு சிகரங்கள் .....

அருகருகே இருந்து கொண்டு
நாம்
 பறக்கவிட்ட முத்தங்கள்
 அறை முழுதும்  வியாபித்து
எனை
வெட்கத்தில் நனைக்கிறன   ....

விரல் கூட படாமல் 
விழிகளால் நீ தீண்டிய  
அங்கங்கள் 
நிலவு வரும் நேரத்து 
அல்லி மலராய் 
மெல்ல விரிகின்றன....

என்
அனிச்சபூ இதழ்களில்
நீ
அழுத்தமாய் தருகின்ற
ஒரேயொரு முத்தமே 
 என்னை 
சிகரமேற்றிவிடும்  என்றால் 
நம்ப மறுக்கிறாய்.....

சிகரம் தொட்டபிறகு
மூச்செடுக்கக் கூட 
இடமோ நேரமோ 
இல்லாத சூழலில் 


எப்படி புரியவைப்பேன் உனக்கு.....


என் சிகரமும்
உன் சிகரமும் 
வேறு வேறு வகையென்று........ 


நன்றி: சௌந்தர சுகன்




ஒதுங்குதல்...

பாக்கெட்டுக்களில் அடைத்த
பாலையும் தயிரையும்
வாங்கி ருசிக்கும் மக்கள்
மறந்தே போனார்கள்
அரிசி கழுவிய
உளுந்து களைந்த
கழனி நீருக்காக
வாசலில் வந்து நிற்கும் மாடுகளை.......

பொட்டல் திடலில்
காகிதங்களையும்
பிளாஸ்டிக் உறைகளையும்
மிச்சம் வைக்காமல்
தின்று முடிக்கும்  மாடுகள்
நீருக்காக ஒதுங்குகின்றன
குடியிருப்புகளின்
கழிவு நீர் பாதைக்கருகில்.........


நன்றி: கல்கி வார இதழ்.




Thursday, April 7, 2011

பசி இலவசம்....

உடம்பின்
ஒட்டுத் துணியும் நழுவுகின்ற
சுரணை ஏதுமின்றி
பசியில் புலம்பியபடி
தெருவோரம் புரண்டு கொண்டிருக்கிறாள்
உடல் முழுவதும்
புண்களைச் சுமந்த
மனநிலை தவறிய பெண்ணொருத்தி....!


சோகையால்
வீங்கிய முகத்திலும்
சின்னதாய் புன்னகைத்  தேக்கி
வருவோர் போவோரிடம்
கையேந்தி நிற்கிறாள்
இனிப்புக் கடையொன்றின் வாசலில்
முதியவள் ஒருத்தி....!

வெறும் தண்ணீரைக் குடித்தே
பெருத்த வயிற்றுடன்
பெரியவள் ஒருத்தியின்
இடுப்பில் அமர்ந்து
அரை மயக்கத்திலேயே
அம்மா, அய்யா என்கிறது
ஒரு இளங்குருத்து....!

எண்ணெய் காணாத
பரட்டைத் தலையுடனும்
ஆங்காங்கு கிழிந்த
அழுக்குச் சட்டையுடனும்
பசியோடு திரிகிறார்கள்
பால் பணம் மாறாத
பச்சிளம் பிள்ளைகள்...!

இவர்களில்
யாருக்குமே தெரியவில்லை...
ஆயிரம் இலட்சம் கோடிகளிலும்
அள்ளி வீசப்படும் இலவசங்களிலும்
தம் வாழ்நாள் பசிக்குமான
பணமும் சேர்ந்து இருக்கிறதென்று....



Thursday, March 17, 2011

எழுதும் நேரம்....

எழுதவே நேரமில்லை
என்று
எப்போதும் புலம்புவேன்
உன்னோடான 
பேச்சுக்களில் 
என் நேரமனைத்தையும் 
செலவு செய்யும் போது.......

சின்னதாக ஊடல் வந்து 
உன்னோடு 
பேசாமல் கழிகின்ற 
நிறைய நேரங்களிலும்
எழுதாமல் தான் இருக்கிறேன்
உன்னைப் பற்றியே 
நினைத்தபடி..... 

முகமூடிகள்.......

எப்போதும்
என் கைப்பையில் இருக்கிறது
ஏராளமான முகமூடிகள்......

யதார்த்தம் மறைப்பதே
இயல்பாகிப் போன
இன்றைய வாழ்வில்
தவிர்க்கவே முடியவில்லை

இறுதி வரை...

நினைவு தப்பிப் போய்
படுக்கையில் கிடக்கும் பாட்டி
புலம்பிக் கொண்டிருக்கிறாள்.....
பக்கத்து வீட்டு
சின்னசாமி  தாத்தாவோடு
தனக்குத்   தொடர்பில்லை என்று .......




கறைகள்.....

இற்று விட்டதோ
என எண்ணும்படிக்கு
துவண்டு விழும் கால்களோடு

ஒரு நாளைக்கு பல முறையாய்
கழிப்பறைக்குள்  நுழைந்து
ஈரப் பிசுபிசுப்போடிருக்கும் அதை
காகிதத்தில் சுற்றிப் போட்டு
புதிதாக ஒன்றை
சுலபமாக வைத்துக் கொள்ளும்
எல்லா நேரங்களிலும்
தவறாமல் நினைக்கிறேன்

துவைத்து அலசி
யார் கண்ணிலும் படாமல்
ரகசியமாய் காயவைத்து
அழுத்தமாய் படிந்து போன
கறைகளோடு 
அதையே மீண்டும்
கஷ்டப்பட்டு உபயோகிக்கும்
எத்தனையோ பெண்களை...


நன்றி:சௌந்தர சுகன்

..அந்தக் கேள்வி ..

அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்
பெட்டிகள்
குவிந்து கிடக்கும் கோப்புகள்
இடைவிடாது ஒலிக்கும்
விசாரணைக்கான அழைப்புகள்

இந்த
ஓய்வில்லாத
அலுவலக பரபரப்புக்கிடையேயும்
காதுகளில் கேட்டுக்கொண்டிருக்கிறது
காலையில் கிளம்பும்போதே
மகன் கேட்ட
"எப்பம்மா வருவீங்க" என்ற
ஒற்றைக் கேள்வி....


நன்றி; கல்கி..

 

ஞாபகத் தேனீ

குளிர்கால இரவுகளில்
போர்வைக்குள் பதுங்கும் போது
உன் இதமான அன்பு
நினைவுக்கு வருகிறது...!

சூடான தேநீரும்
சில்லிடும் மழையுமாய்
மாலை நேரங்கள்
உன் மந்தகாசப் புன்னகையை
நினைவூட்டுகிறது...!

வேனல் காலத்து
வியர்வை கசகசப்பில்

நானும் என்னைப்போன்ற என் வீட்டு மேரியும்.

அன்று ஞயிற்றுக்கிழமை.  பொதுவாக எல்லோரும்  அந்த நாட்களில் எல்லா வேலைகளையும் ஆற அமர செய்வார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் நான் அலுவலகம் கிளம்புவதைவிட சுறுசுறுப்பாய் காலையிலேயே சமையலைத்  தொடங்கிவிடுவேன். ஆகா, நீ சுறுசுறுப்புத் திலகம்தான் என்று யாரும் எனக்கு அவசரப்பட்டு பட்டம் தந்துவிட வேண்டாம். என் சுறுசுறுப்பான சமையலுக்குக் காரணம், தொடர்ந்து எனக்கு கிடைக்கப்போகிற நிம்மதியான ஓய்வுதான்.  ஞாயிற்றுக் கிழமைகளில் மீன்குழம்பு வைத்து, உணவுக்கட்டுப்பாடு ஏதும் இல்லாமல் நன்றாக சாப்பிட்டு, அப்படியே போய் படுத்துக்கொண்டு அன்று வந்த தினசரி அல்லது ஏதாவது  புத்தகத்தை விரித்து லேசாக படிப்பதற்குள் அருமையாய் தூக்கம் வரும். கிட்டத்தட்ட 2  முதல் 3  மணி நேரம்  கூட தூங்குவேன். அப்படி மீன்குழம்பும் தூக்கமும் இல்லாத ஞாயிறுகளை என்னால் ரசிக்கவே முடிவதில்லை. மீனுக்கு பதிலாக வேறெதையும் சமைக்கக்கூட பிடிப்பதில்லை எனக்கு.

Thursday, March 10, 2011

நழுவி விழும் வார்த்தைகள்

எனக்கான கடமைகள்
துயிலெழுப்ப
என் பொழுது புலர்கிறது.....

மனைவியாய், தாயாய்
பொறுப்புகள் வரிசைக் கட்டி நிற்க

ஒரு திரைப்படம்....




சினிமா பார்ப்பதில் பெரிய ஆர்வம் ஏதுமில்லை எனக்கு.கொஞ்சம் பழைய படங்களைப் பார்க்க வேண்டுமென்று சில சமயம் தோன்றுவதுண்டு. நினைவு வரும்போது அந்தப் படங்களின் பெயரை எழுதி வைத்தால் சி.டி. வாங்கிப் பார்க்கலாம் தான். எதையுமே உடனே எழுதி தான் நமக்கு பழக்கமில்லையா, அது அப்படியே மறந்து போய்விடும்..

Friday, March 4, 2011

இதுவும் ஒரு வலி

வளையம் பொருந்தாமல்
வலியோடு ரத்தப் போக்கு..

மாத்திரைகள் எடுத்தாலோ
பக்கவிளைவின் பாதிப்பு..

உறைபோட்டுக் கொள்வதற்கோ
உடன்பாடே வருவதில்லை...

கர்ப்பத்தின் பயத்தோடு
ரசிக்கவியலாமல்
கடந்து போகும் காம இரவுகள்

ஐந்து பிரசவம்
ஆறேழு சிதைவு என்று
சோர்வாய் நிற்கும் பெண்ணின்
சோகத்தைப் புலப்படுத்தும்....




நன்றி; சௌந்தர சுகன் 



சந்தோஷமாய் ஒரு அறிவிப்பு...

2010 ஆம் ஆண்டில் வெளிவந்த 12 சௌந்தரசுகன் இதழ்களில் அச்சாகியிருந்த 98 கவிதைகளில் நான்கு கவிதைகளை தேர்ந்தெடுத்து கவிதை ஒன்றுக்கு ரூ.250 பரிசு வழங்கப்படுகிறது, "அம்மா ஞா.சுசீலா மூன்றாமாண்டு நினைவு விழா"வில்.! . . . .

பரிசுக்குரிய கவிஞர்கள். . .. . .


கிருஷ்ணப்ரியா,

சக்தி அருளானந்தம்,

வடுவூர் சிவமுரளி,

நாவல் குமாரகேசன்.........


விழா நடைபெறும் தேதி மார்ச் 9 . இடம்; அம்மா வீடு, சி 46  இரண்டாம்

 தெரு, முனிசிபல் காலனி , தஞ்சாவூர்.




அனைவரும் வருக..\

உங்கள் வாழ்த்துப் பூக்களைத் தருக..... 



Wednesday, February 16, 2011

கம்பரைத் தேடி.........

வெகு நாட்களாக ஒரு ஆசை என் செல்ல மகனுக்கு.. தொலைக்காட்சியில் வருகிற குழந்தைகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாறுவேடமணிந்து கலக்க ஆசை.. எப்போதெல்லாம் அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறதோ அப்போதெல்லாம்

Tuesday, February 15, 2011

பிரிவு...2

உன் அன்பு
எத்தனை வலிது என்பதை
பிரிவில் உணர்ந்தேன்....

எப்போதும்
உன்னையேச் சுற்றி வரும்
பட்டாம்பூச்சி மனது...!

அருகில் இருக்கும்போது

வற்றாத அன்பு.

எப்போதுமே
என் வாழ்வின் அறிமுக நேரங்கள்
அதிகமாகி வருகிறது.....
ஒவ்வொரு புள்ளியும்
ஒரு
ஆரம்பமாய்....

முற்றுப் புள்ளி என்பது