Monday, August 20, 2012

ஆனந்தம்......

உங்கள் காலத்தில்
அலைபேசிகள் இல்லையா....

திரைப்படங்களை
வானொலியில் கேட்டீர்களா...

பள்ளி வாகனம் இல்லாமல்
எப்படி பள்ளிக்குப் போனீர்கள்..

கணிணிகள் இல்லாத வாழ்வு
கசப்பாயில்லையா

விதவிதமாய்
கேள்விக்கணைகள் வீசும்
என்
குட்டிக்கவிதையை
அணைத்தபடி சொன்னேன்..

நாங்கள்
அப்போது தான் இருந்தோம்
ஆனந்தமாய்....

இயலாமை.....

கதவு சன்னலை
இறுக அடைத்து
திரைச்சீலைகளை
இழுத்துவிட்ட பின்பும்
உடை மாற்ற முடியவில்லை.....

சுவற்றில் இருந்து கொண்டு
சிரித்தபடி பார்க்கின்றனர்
சிவன் முருகன்
பெருமாள் பிள்ளையார்
இன்ன பிற ஆண்கள்.....