Thursday, April 19, 2012

நினைவுச் சாரல் குறித்து ஒரு பதிவுச் சாரல்




உலகின் ஆதியாக இருக்கிறாள் அம்மா. எந்த இனமானாலும் அம்மாவிலிருந்தே தொடங்குகிறது. கடல் நீரை உள்வாங்கி கருணை மழையாய் பொழியும் மேகம் போன்றவளா, எல்லா உயிரினமும் வாழ தன் மடி விரித்து மகிழ்ந்திருக்கும் பூமியைப் போன்றவளா? அம்மாவை விளக்கிச் சொல்ல வார்த்தைகள் ஏது? அம்மாவால் வளரும் எல்லா பிள்ளைகளும் வளர்ந்த பின் அம்மாவை நினைக்கிறார்கள். சிலர் மட்டுமே தமது செயல்களால் அம்மாவை உலகின் முன் நிலை நிறுத்துகிறார்கள்..மிகச் சிலரே ‘இப்படியொரு அம்மா நமக்கு வாய்க்கவில்லையேஎன்று ஒவ்வொருவரும் ஏங்கும் விதமாக மிகச் சிறப்பாக அம்மாவின் நினைவைப் பாடிப் பரவுகிறார்கள்.. சுகன் அம்மாவால் வளர்ந்தவர்., அம்மாவால் வாழ்கிறவர், அம்மாவால் நிலைத்திருக்கப் போகிறவர்.... ஒவ்வொரு வருடமும் அம்மாவின் நினைவு நாளை சடங்கு, சம்பிரதாயங்கள் என்னும் பாசாங்குகளில் மூழ்கிவிடாமல் இயல்பான இனிமையான இலக்கிய நிகழ்வாக்க் கொண்டாடும் சுகன் ஒரு முன்னுதாரணம்...
இந்த வருடம் 9.3.2012 அன்று மாலை எல்லா சுகன் நிகழ்வுகளையும் போலவே மிகச் சரியாக  6.30 மணிக்கு அம்மாவின் நினைவுச் சாரல் வீசத் தொடங்கிற்று....