Saturday, July 23, 2011

மொழியின் தீ......

ஒளிந்து கொள்கிறேன்
இந்த காதல் விளையாட்டில்
உன்னிடம் அகப்பட்டு விடக் கூடாதென்று......
என்றாலும்
சின்ன உதடுகளைத் திறந்து
நீ
செல்ல மொழிகளை உதிர்க்கையில்
தீப்பற்றிக் கொள்கிறது
என் அந்தப்புரம்..........
 
 
நன்றி; கல்கி வார இதழ்...
 

Thursday, July 7, 2011

ஊமை வலி........

கடிவாளத்தை இழுத்து குதிரையை நிறுத்துவதைப் போல
என் வாகனத்தை மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தினேன். 
குதிரைப்பயணம்  போல குதித்தபடி  இரு சக்கர வாகனத்தில்
 தினமும் வருவதே உடம்பை வருத்தும்
 அசதியைத் தருகிறது...அன்று காலையிலேயே 
மருத்துவமனைக்கு வந்திருந்த மக்கள் கூட்டம்
 அதிகமாய் பெரிய வரிசையாய் நின்றிருந்தனர்.
அந்த கூட்டத்தை பார்த்தவுடன் என் உடல் வலி
 என்னை பயமுறுத்திற்று. ஆனாலும் வேறு வழியில்லை...

இன்று கர்பவதிகளுக்கான சிறப்புப் பரிசோதனையும்,
மருத்துவமும் நடைபெறும் நாள்.