கண்களை கூராக்கி அவள் மீண்டும் பார்த்தாள். அவன் தானா? இல்லை, அவள் கண்கள் அவளை எப்போதும் ஏமாற்றியிருக்கவில்லை. அவனேதான். அதே இறுக்கமான முகம். சற்றே கறுத்த உதடுகள். சுருண்ட தலைமுடி. நீண்ட கைகளும், கால்களும். சற்றும் பருமன் ஏறாமல் அப்போது பார்த்த அதே உடல் வாகு. தலைமுடி நரைத்திருக்கிறதா என்று கவனித்தாள். இல்லை. பல முறைகள் அவள் ரசித்த அந்த சுருண்ட முடி நரைத்திருக்கவில்லை.
அந்த குட்டி அறையில் இருந்து வெளியில் தெரியும் தூரம் குறைவானதாக இருந்தது. இன்று நிறைய கூட்டம். அந்த கூட்டத்தில் அவன் அவள் கண்களிலிருந்து மறைந்து போனான். துழாவித்தேட இயலாதபடிக்கு