சில நாட்களுக்கு முன்னால் நண்பர் திரு இரா. எட்வின் அவர்கள் இந்தியாவின் மருத்துவர்கள் பற்றியும், மருந்துகள் விலைப் பற்றியும் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அரசு மருத்துவமனைகள் குறித்தும் ஒன்றிரண்டு வரிகள் அதில் வந்திருந்தன. பொதுவாகவே அரசு மருத்துவமனைகள் என்றால் கொஞ்சம் அலட்சியமும், அங்கே தவறுகள் தான் நடக்கும் என்றும் தான் மக்களாகிய நாம் சிந்திக்கிறோம். மேலே குறிப்பிட்ட கட்டுரையில் கூட, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை தனியார் மயமாக்கப் படுவதை எதிர்த்துத் தான் பேசியிருந்தார் எட்வின். அவர் வசிக்கும் பெர்ம்பலூரில் உள்ள அரசு மருத்துவமனைப் பற்றியோ, பணி புரியும் இடத்திலிருக்கும் அரசு மருத்துவமனைப் பற்றியோ சொல்ல ஒன்றுமில்லை அவருக்கு. சரி அவர் அரசியல் அவருக்கு.