அன்று ஞயிற்றுக்கிழமை. பொதுவாக எல்லோரும் அந்த நாட்களில் எல்லா வேலைகளையும் ஆற அமர செய்வார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் நான் அலுவலகம் கிளம்புவதைவிட சுறுசுறுப்பாய் காலையிலேயே சமையலைத் தொடங்கிவிடுவேன். ஆகா, நீ சுறுசுறுப்புத் திலகம்தான் என்று யாரும் எனக்கு அவசரப்பட்டு பட்டம் தந்துவிட வேண்டாம். என் சுறுசுறுப்பான சமையலுக்குக் காரணம், தொடர்ந்து எனக்கு கிடைக்கப்போகிற நிம்மதியான ஓய்வுதான். ஞாயிற்றுக் கிழமைகளில் மீன்குழம்பு வைத்து, உணவுக்கட்டுப்பாடு ஏதும் இல்லாமல் நன்றாக சாப்பிட்டு, அப்படியே போய் படுத்துக்கொண்டு அன்று வந்த தினசரி அல்லது ஏதாவது புத்தகத்தை விரித்து லேசாக படிப்பதற்குள் அருமையாய் தூக்கம் வரும். கிட்டத்தட்ட 2 முதல் 3 மணி நேரம் கூட தூங்குவேன். அப்படி மீன்குழம்பும் தூக்கமும் இல்லாத ஞாயிறுகளை என்னால் ரசிக்கவே முடிவதில்லை. மீனுக்கு பதிலாக வேறெதையும் சமைக்கக்கூட பிடிப்பதில்லை எனக்கு.
சினிமா பார்ப்பதில் பெரிய ஆர்வம் ஏதுமில்லை எனக்கு.கொஞ்சம் பழைய படங்களைப் பார்க்க வேண்டுமென்று சில சமயம் தோன்றுவதுண்டு. நினைவு வரும்போது அந்தப் படங்களின் பெயரை எழுதி வைத்தால் சி.டி. வாங்கிப் பார்க்கலாம் தான். எதையுமே உடனே எழுதி தான் நமக்கு பழக்கமில்லையா, அது அப்படியே மறந்து போய்விடும்..
2010 ஆம் ஆண்டில் வெளிவந்த 12 சௌந்தரசுகன் இதழ்களில் அச்சாகியிருந்த 98 கவிதைகளில் நான்கு கவிதைகளை தேர்ந்தெடுத்து கவிதை ஒன்றுக்கு ரூ.250 பரிசு வழங்கப்படுகிறது, "அம்மா ஞா.சுசீலா மூன்றாமாண்டு நினைவு விழா"வில்.! . . . .
பரிசுக்குரிய கவிஞர்கள். . .. . .
கிருஷ்ணப்ரியா,
சக்தி அருளானந்தம்,
வடுவூர் சிவமுரளி,
நாவல் குமாரகேசன்.........
விழா நடைபெறும் தேதி மார்ச் 9 . இடம்; அம்மா வீடு, சி 46 இரண்டாம்