(எலும்பு முறிவு, அறுவை சிகிச்சை என்று படுத்திருந்த நேரம் எழுதியது....இரண்டு வருடம் முன்பு..... சும்மா ஒரு "திரும்பிப் பார்க்கிறேன்" தான்....)
**********************************************************************************************
அன்பான எலும்புகளே.....
எத்தனைதான்
உங்களுக்குள்
சண்டையென்றாலும்
பேசித்
தீர்த்திருக்கலாம்...!
என்ன
பிரச்சனை என்று
என்னிடம்
ஏதாவது ரூபத்தில்
எடுத்துச் சொல்லியிருக்கலாம்...!
பிரிந்து போகும்
சந்தர்ப்பத்திற்காகவே
காத்திருந்ததைப் போல
சின்னதாய் நான்
இடறி விழுந்ததும்
உங்களுக்குள் உள்ள
உறவை
முறித்துக் கொண்டீர்களே!
உங்களையே நம்பி
பிறந்தது முதல் பலவருடம்
பழகிப்போன நான்
இனி
என்ன செய்வேன் என்று
இம்மியேனும்
யோசித்தீர்களா....?
உங்கள்
ஒத்துழைப்பு இல்லாமல்
ஓரடி கூட
நகர முடியாத
ஓய்வுக்கு என்னைத் தள்ளிவிட்டீர்.
பிரிந்த உங்களை
மீண்டும்
சேர்த்திட தான்
நான்
எத்தனை
வலி சுமந்தேன்!
முற்றிலுமாய்
முறிந்துவிட்ட
உறவொன்றை
மீண்டும்
இயல்பான நிலைக்கு
இணைத்துவைக்கும் போராட்டம்
கடினம் என்பதனை
கணப் பொழுதில் மறந்தீரே!
உங்களை
இணைக்கின்ற பாலமாய்
உறுதியாய்
ஒரு
சமாதானப்புறா
உள்ளே
அனுப்பி வைக்க
நான்
உயிர்வலி தாங்கினேன்!
அந்த
துருப்பிடிக்காத
சமாதானப்புறா
பறந்துவிடாமலிருக்க
மூன்று
கால் விலங்குகள் வேறு!
இத்தனையும் நான்
செய்து முடித்தும்
உள்ளே
உங்களுக்குள்
இன்னும் என்ன
மனப் பிணக்கு!!
சேரமாட்டோம் என்று
நீங்கள்
அடம் பிடித்து அழுதாலும்
சேரும் வரை
என் முயற்சி
தொடர்ந்து கொண்டேயிருக்கும்!
உட்கார்ந்து இருந்தபடி
உங்களை
ஒட்ட வைத்த பிறகு தான்
எழுந்து நடப்பதென்று
நான்
வைராக்கியம் கொண்டுவிட்டேன்!
அடம் பிடித்தது போதும்
என்
அன்பு எலும்புகளே!
சீக்கிரம் சேருங்கள்....
உங்கள்
பிணக்கம் மாறட்டும்!
என்
வலிகள் குறையட்டும்!!
எனக்காக காத்திருக்கும்
என் வேலைகள் எல்லாம்
கண்ணீர் வடிக்கிறது...
என்னைக்
காணத் துடிக்கிறது...
நடக்க வேண்டும்
நான்...
அடம் பிடித்தது போதும்
என்
அன்பு எலும்புகளே
சீக்கிரம் சேருங்கள்.
********************
**********************************************************************************************
அன்பான எலும்புகளே.....
உங்களுக்குள்
சண்டையென்றாலும்
பேசித்
தீர்த்திருக்கலாம்...!
என்ன
பிரச்சனை என்று
என்னிடம்
ஏதாவது ரூபத்தில்
எடுத்துச் சொல்லியிருக்கலாம்...!
பிரிந்து போகும்
சந்தர்ப்பத்திற்காகவே
காத்திருந்ததைப் போல
சின்னதாய் நான்
இடறி விழுந்ததும்
உங்களுக்குள் உள்ள
உறவை
முறித்துக் கொண்டீர்களே!
உங்களையே நம்பி
பிறந்தது முதல் பலவருடம்
பழகிப்போன நான்
இனி
என்ன செய்வேன் என்று
இம்மியேனும்
யோசித்தீர்களா....?
உங்கள்
ஒத்துழைப்பு இல்லாமல்
ஓரடி கூட
நகர முடியாத
ஓய்வுக்கு என்னைத் தள்ளிவிட்டீர்.
பிரிந்த உங்களை
மீண்டும்
சேர்த்திட தான்
நான்
எத்தனை
வலி சுமந்தேன்!
முற்றிலுமாய்
முறிந்துவிட்ட
உறவொன்றை
மீண்டும்
இயல்பான நிலைக்கு
இணைத்துவைக்கும் போராட்டம்
கடினம் என்பதனை
கணப் பொழுதில் மறந்தீரே!
உங்களை
இணைக்கின்ற பாலமாய்
உறுதியாய்
ஒரு
சமாதானப்புறா
உள்ளே
அனுப்பி வைக்க
நான்
உயிர்வலி தாங்கினேன்!
அந்த
துருப்பிடிக்காத
சமாதானப்புறா
பறந்துவிடாமலிருக்க
மூன்று
கால் விலங்குகள் வேறு!
இத்தனையும் நான்
செய்து முடித்தும்
உள்ளே
உங்களுக்குள்
இன்னும் என்ன
மனப் பிணக்கு!!
சேரமாட்டோம் என்று
நீங்கள்
அடம் பிடித்து அழுதாலும்
சேரும் வரை
என் முயற்சி
தொடர்ந்து கொண்டேயிருக்கும்!
உட்கார்ந்து இருந்தபடி
உங்களை
ஒட்ட வைத்த பிறகு தான்
எழுந்து நடப்பதென்று
நான்
வைராக்கியம் கொண்டுவிட்டேன்!
அடம் பிடித்தது போதும்
என்
அன்பு எலும்புகளே!
சீக்கிரம் சேருங்கள்....
உங்கள்
பிணக்கம் மாறட்டும்!
என்
வலிகள் குறையட்டும்!!
எனக்காக காத்திருக்கும்
என் வேலைகள் எல்லாம்
கண்ணீர் வடிக்கிறது...
என்னைக்
காணத் துடிக்கிறது...
நடக்க வேண்டும்
நான்...
அடம் பிடித்தது போதும்
என்
அன்பு எலும்புகளே
சீக்கிரம் சேருங்கள்.
********************
முறிந்த எலும்புகளைக் கூட ஒன்றிணைத்திடலாம் போலிருக்கிறது எப்பாடுபட்டும் ...சில உறவுகளின் விரிசல் உடையார் மண்பாண்டம் உடைந்த கதையாய்... வாங்க கிருஷ்ணப் ப்ரியா... ரொம்ப நாளா எங்க பதிவுலகம் பக்கமே காணோமே என்றிருந்தேன்...
ReplyDeleteword verification -ஐ எடுத்திடலாமே... கமெண்ட் போட வசதியாயிருக்கும்.
ReplyDeleteநன்றி நிலா..... நீங்கள் கேட்டபடி வொர்ட் வெரிஃபிகஷனை எடுத்துவிட்டேன்...
ReplyDelete