Thursday, December 2, 2010

விடாமல் தொடரும் அடை மழையில்

வீதியோரத்துச் சின்னக் குடிசைகள்......

விழிகளில் மழை...!

9 comments:

  1. மேடம் என்ன கிண்டலா...எவ்ளோ நாளா உங்க கவிதைகள சுகன்ல வாசிச்சிக்கிட்டு வர்றோம். என்னாங்க இப்படி கேட்டுப்புட்டீங்க? ரொம்ப நாளா பெண் பெயர்ல யாரோ ஆண் தான் எழுதிக்கிட்டு இருக்காங்கன்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன்....ஏன்னா கவிதைகள் நல்லா இருந்தது!!!!

    ReplyDelete
  2. உங்க கவிதையா, கதையான்னு தெரிலை... அரசு கூட ஏதோ திட்டம் அறிவிச்சுதுதானே? பெண்கள் பிரச்சனை சம்பந்தமா?? வாழ்த்துக்கள் மேடம். எனக்கெல்லாம் இன்னும் 7 சென்மம் ஆனாலும் கவித எழுவ வாராது :)

    ReplyDelete
  3. அப்புறம் ஒரு சின்ன வேண்டுகோள் : - ஏதாச்சும் திரட்டில சேருங்க உங்க வலைப்பூவை. நன்றி.

    ReplyDelete
  4. நன்றி நண்பரே மரா... அது என்ன கவிதை நல்லா இருந்தா அது பெண் பெயரில் எழுதும் ஆண் என்று நினைப்பீர்களா? லொள்ளு தானே?
    நீங்கள் குறிப்பிடுவது "கறைகள்" என்ற என் கவிதையை.. என் கவிதைகள் இப்படி தொடர்ச்சியாக கவனிக்கப் படுகிறது என்பது எனக்கு மகிழ்வையும், எழுத வேன்டுமென்ற ஆர்வத்தையும் தருகிறது... மீண்டும் நன்றி

    ReplyDelete
  5. திரட்டியில் சேர்ப்பது பற்றியெல்லாம் இனிமேல் தான் தெரிந்துக் கொள்ள வேண்டும்.. முயற்சிக்கிறேன்

    ReplyDelete
  6. உங்கள் வலைப்பூவிற்கு தஞ்சை கவிதை என்று பெயரிட்டமைக்கு முதலில் வாழ்த்துகிறேன் . விதைக்கவும் உயிருட்டவும் தஞ்சாவூர் காரர்களுக்குத்தானே தெரியும் அது பயிரானாலும் கவிதையானாலும் ஒண்ணுமில்லை அது ஊர்ப்பாசம் ..... தொடரட்டும் உங்கள் கவிதை மழை

    ReplyDelete
  7. அன்பான பாரதி, உங்கள் வருகைக்கும், பதிவுக்கும் நன்றி.உங்கள் ஊர்ப்பாசம் நெகிழ வைக்கிறது. இந்த உலகில் எனக்கு மிகவும் பிடித்த இடமும், நான் எப்பொழுதும் வசிக்க விரும்பும் இடமும் இந்த தஞ்சை தான். ஆனால் வலைப்பூவிற்கு பெயரிட்டதும், வலைப்பூ மலர வைத்ததும் என் அன்புக்குரிய தம்பி ......

    ReplyDelete
  8. நன்றி.
    இது எனது கடமை.
    நீ எங்களது பெருமை.
    உனது படைப்புகள் இனிமை.
    அடையட்டும் உன் இலட்சியம் முழுமை.

    ReplyDelete
  9. @ கண்ணன்

    அழகாய் கவிதையில் உன் கருத்தைச் சொல்லி என்னை மகிழ வைத்துவிட்டாய் கண்ணா... உன் வாழ்த்துக்களோடு என் லட்சியத்தை எட்ட முயல்கிறேன்...

    ReplyDelete