Thursday, March 17, 2011

முகமூடிகள்.......

எப்போதும்
என் கைப்பையில் இருக்கிறது
ஏராளமான முகமூடிகள்......

யதார்த்தம் மறைப்பதே
இயல்பாகிப் போன
இன்றைய வாழ்வில்
தவிர்க்கவே முடியவில்லை
தினமும்
முகமூடிகள் அணிவதை.....

தேவைக்குத் தகுந்தபடி
முகமூடி மாற்றுவதில்
என்னையும் அறியாமல்
தேறித்தான் போய்விட்டேன் நான்...

அணிந்த முகமூடியை
அகற்ற மறந்து
அப்படியே  உறங்கப் போகும்
தருணங்கள் கூட
சில சமயம்  வாய்த்து  விடுகிறது...

புனைவுகளற்ற
என் நிஜமான முகம்
முகமூடிகளை உதற
தினமும்
போராடிக்  கொண்டேயிருக்கிறது....

என்றாலும்
இன்னும் கூட
என்
கைப்பையில் இருக்கிறது
ஏராளமான முகமூடிகள்.......

2 comments:

  1. முகமுடிகள் வாழ்க்கையின் தேவையாக போய்விட்டது. பொல்லாததாக சித்தரிக்கப்படுகிறோம் போடாத முகமுடிக்காக.

    ReplyDelete
  2. முகமூடிகளற்ற வாழ்க்கை அமைய பிரார்த்திப்போம்..

    ReplyDelete