விஜய் ரோஷன் |
பாட்டும் பரதமும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது சிறு வயது முதல் என் தீராத ஆசை....
பள்ளிப் பருவத்திலே நிறைய நடனங்கள் ஆடியிருக்கிறேன், என் நடனம் இன்றி பள்ளியில் ஒரு விழாவும் நடக்காது என்ற அளவுக்கு.! ஆனாலும், பரதம் மட்டும் ஆடியதே இல்லை. பரதம் ஆடுவது கொஞ்சம் பொருட்செலவுக்குரிய செயல் என்பதால், அதற்கு வழியில்லாத என்னை ஆசிரியர்கள் தேர்ந்தெடுத்ததே இல்லை. அது இன்னமும் ஒரு தீராத ஏக்கம் தான் மனதில்...
எப்படியும் அந்த பரதத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற வெறி மனதில் இருந்ததன் விளைவு,
34வது வயதில் போய் என் குருவிடம் நின்றேன். என் குரு திருமதி.அருணா சுப்பிரமணியன் என்னை வாஞ்சையோடு ஏற்று கற்க வயது ஒரு தடையில்லை என்று தேற்றி, பரதம் கற்றுத் தந்தார். உனக்கு பிடித்திருந்தால் ஆடு என்று என் கணவர் ஊக்கம் தந்தார்...
இரண்டு வருட பயிற்சி என்னை தில்லானா வரை கொண்டு வந்தது. அதற்குள்
என் இரண்டாவது மகன் விஜய் என் வயிற்றில் வளர, நான் பரதத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கும் படி ஆயிற்று.
இரண்டாவது பிள்ளை மகளாய் இருக்க வேண்டும், பரதம் பாட்டு எல்லாம் அவளுக்குச் சொல்லித் தர வேண்டும் என்ற என் ஆசை, அவன் மகனாய் பிறந்த போது கொஞ்சம் ஏமாற்றமாய்த் தான் இருந்தது. ஆனால்,
நான்கு மாதம் வரை என் வயிற்றில் இருந்தபடி பரதம் ஆடியதாலோ என்னவோ அவனுக்கு நடனத்தில் அப்படி ஒரு ஈர்ப்பு..... எப்போதும் பாடிக் கொண்டும், ஆடிக் கொண்டும் இருக்கும் அவன் இப்போது பரதமும், பாட்டும் முறையாய் கற்கிறான்....
பள்ளி மாறுவேடப் போட்டி |
அவன் வரலாற்று ஆசிரியை “MY SLUM" என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதச் சொன்னதாகச் சொல்லிக் கொண்டிருந்தவன், 10 நிமிடத்தில் ஒரு கவிதையை எழுதிக் கொண்டு வந்து நீட்டினான்....
எப்படி அந்த உணர்வை விளக்குவதென்று தெரியவில்லை எனக்கு......
அவன் அளவுக்கு கருத்தாழமும், கவிதை நயமும் செறிந்திருந்த அந்த கவிதை என்னை “ஈன்ற பொழுதில் பெரிதுவக்க” வைத்தது....
அந்த கவிதை இதோ...
MY SLUM
When will my slum improve
when will my slum improve....
As I see through my slum
I can find only huts
Not a single cement house
All madeup of mud and clay....
நானும், என் கவிதைகளும் |
when will my slum improve(2)
Water is not a problem for us
Its only the family stress
How my parents will pay the school fees
While their job is cutting the trees
when will my slum improve (2)
Who will improve my slum
Who will improve my slum
I will improve my slum
I will improve my slum
But I don't know when....
( By M. Vijai Roshan )
கற்க வயது ஒரு தடையில்லை - 100% உண்மை...
ReplyDeleteதான் நினைத்ததை, தன் குழந்தை மூலம் கண்டால் அதை விட சந்தோசம் ஏது...? வாழ்த்துக்கள்...
விஜய் ரோஷன் அவர்கள் மேலும் சிறக்கவும் வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்...
நீங்கள் சொல்வது போல வயது தடையில்லை என்று நான் கற்றுக் கொண்ட விஷயங்கள் பல....
Deleteஉங்கள் வாழ்த்துக்கு நன்றி....
விளையும் பயிர்! மகன் தந்தைக்கு மட்டுமல்ல... தாய்க்கும் ஆற்றும் உதவி!!
ReplyDeleteபிள்ளைக்கு சுற்றிப் போடுங்க... உங்களுக்கும் தான்!
எங்க கண்ணெல்லாம் பொல்லாத கண்:)
உங்கள் கண் பட்டால் எங்கள் வாழ்வில் வளம் கூடும் நிலா......
Deleteஎப்போதும் கற்கலாம், உங்கள் கனவுகளை உங்கள் குழந்தைகள் நிறைவேற்றட்டும். நீங்கள் உங்கள் நடனத்தை தொடரலாமே.
ReplyDeleteவிஜய் ரோஷன் கவிதைக்கு வாழ்த்துக்கள்.
நடனத்தைத் தொடர ஆசை தான், ஆனால் இப்போது உடல் ஒத்துழைக்க மறுக்கிறது....
Deleteவிஜய் ரோஷன் உங்கள் வாழ்த்தால் மேலும் வளர்வான். நன்றி கோமதி...
வாழ்த்துக்கள் முயன்றால் முடியாதது இல்லை ,தோழி உங்கள் எண்ணங்களின் பிறப்பாய் உங்கள் மகன்....வேறென்ன வேண்டும் இனி...
ReplyDeleteஉண்மை தான் கீது....
Deleteவேறென்ன வேண்டும் இனி....
Very nice to hear. All the best for his bright future
ReplyDeleteVery nice to hear. All the best for his bright future
ReplyDeleteThank u sir.....
ReplyDeleteஉங்களுக்கு ஆட்டிவிக்கத்தான் தெரியும் என நினைத்திருந்தேன் ஆடத் தெரியுமா? அடடா மிஸ் பண்ணியாச்சே உங்கள் அடுத்த கவிதை தொகுப்பு விழாவில் ஜமாய்ச்சுடலாம் விஜய்-இன் கவிதை நிஜமாக சிலிர்க்க வைத்தது hats off vijay புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்ன
ReplyDeleteஅக்கா,
ReplyDeleteஇது செய்தி எனக்கு. இருப்பினும் இன்ப அதிர்ச்சி. விஜய் எழுதிய கவிதை நன்றாக இருக்கிறது. அவனுக்கு எனது வாழ்த்தினை தெரிவிக்கவும்.