உனக்குப் பிடித்தமான
வண்ணக் கலவைகள் கொண்டு
என்னை வரைய முற்படுகிறாய்....
எனக்கான வண்ணங்களில்
உன் தூரிகை நனைந்து விடாதிருக்க
மிகுந்த பிரயத்தனம் செய்கிறாய் ...
புராதனச் சுவரில்
அறையப்பட்டு இருக்கும்
சட்டகத்துக்குள்
என் ஓவியத்தை திணித்துவிடும் யத்தனிப்பில்
விரயமாகிக் கொண்டிருக்கிறது
உன்னிடமிருக்கும் நமக்கான நேரம். ..
அந்த கால இடைவெளியில்
வில்லினின்று பறக்கும் அம்பாக
சிறகு விரித்து சிட்டெனப் பறக்கிறது என் சுயம்....
நன்றி: வறண்ட ஒரு மதிய பொழுதை கவிதையாக்கும் பொழுதாக மாற்ற முடிந்த அமிர்தம் சூர்யாவுக்கும்,
அக்கறையுடன் தவறுகளைத் திருத்தும் பாரதிக்குமாருக்கும்....
பிரசுரித்த கல்கிக்கும்

வாழ்த்துக்கள் சகோதரியாரே
ReplyDeleteஅன்புள்ள
ReplyDeleteவணக்கம். நானும் வாசித்தேன் கல்கியில். தொடர்ந்து பறக்கட்டும் எல்லையற்ற வெளியில். வாழ்த்துக்கள்.
"புராதனச் சுவற்றில்
ReplyDeleteஅறையப்பட்டு இருக்கும்
சட்டகத்துக்குள்
என் ஓவியத்தை திணித்துவிடும் யத்தனிப்பில்"
இந்த வரிகள் நம் சமுதாயத்தின் தவறினை மிக அழகாக வர்ணிக்கின்றன
'நவீனம்' பழகிய வரிகள்...
ReplyDeleteநன்றி... பா.வெ.....
அருமையான வரிகள் 😇
ReplyDelete