Friday, February 7, 2014

கள்ளியிலும் பூக்கள்



சப்பாத்திக் கள்ளி மலர் 

















எண்ண ஊற்றுகளில்
பீறிட்டு வழியும் காதலால்
நிரம்பித் ததும்புகிறது
உள்ளக் கோப்பை
ஆற்றுப் படுகைகளில்
ரசிப்பாரின்றி குலுங்கும்
முற்றாத தேக்கின் பூக்களென……!

புறக்கணிப்பின் வலியில்
சப்பாத்திக் கள்ளியின்
முட்களென உருமாறுகிறது  விழிகள்…..

பயந்து தடுமாறி
ததும்பி வழிந்தோடும் கோப்பையை
வெற்றிடமாக்கும் முயற்சியில்
காதலை வார்த்தைகளாய்க்
குழைத்து, குழைத்து
பிரபஞ்ச வெளியெங்கும் வீசுகிறேன்…….

வீசிய இடமெல்லாம்
காதலின் வித்துக்கள் முளைத்து
மணக்கத் தொடங்குகிறது  பிரபஞ்சம்…

பூத்திருக்கிறது
கள்ளியிலும் பூக்கள்.......




நன்றி: கல்கி வார இதழ்

5 comments:

  1. காதலை வார்த்தைகளாய்க்
    குழைத்து, குழைத்து
    பிரபஞ்ச வெளியெங்கும் வீசுகிறேன்…….

    வீசிய இடமெல்லாம்
    காதலின் வித்துக்கள் முளைத்து
    மணக்கத் தொடங்குகிறது பிரபஞ்சம்…

    பூத்திருக்கிறது
    கள்ளியிலும் பூக்கள்.......//

    அன்பால் அனைத்தையும் ஆக்கலாம் என்கிறது கவிதை.
    மிக அருமை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கோமதி அரசு,

      பொங்கி வரும் கோபம் கூட அன்பின் முன்
      மங்கித் தானே போகிறது.....!

      Delete
  2. /// காதலை வார்த்தைகளாய்க்
    குழைத்து, குழைத்து... ///

    அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன்,

      உங்கள் வருகையும் வாழ்த்தும் மகிழ்விக்கிறது

      Delete
  3. நான் ரசிக்கும் ஒவ்வொரு மலர்களிலும்
    உன் நினைவுகள் மட்டும்...
    ஒர் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் இரவில் மலரும் கள்ளிப்பூக்கள்
    ஒரே இரவில் நிலவை ரசித்து
    உதிர்ந்து விடும் .
    ஆனால் என் உயிரே இந்த உலகத்துவிட்டு போனாலும்
    உன் நினைவுகள் மட்டும்
    என்
    இதயத்தில் நிற்க்கும்
    இப்படிக்கு உன்
    இதயத்தில்
    ஒருவன்
    சுதாமணி......

    ReplyDelete