Saturday, December 25, 2010

காத்திருப்பு....

என் வீட்டுத் தோட்டத்தில்
ஆயிரமாய் ரோஜாக்கள்
வாசத்துடன் பூத்திருக்கின்றன...
மனசென்னவோ
நீ
காதலுடன் தரப் போகும்

Thursday, December 23, 2010

கண்களில் நீ.........

ஊர் உறங்கும்
இரவு வேளைகளில்
உள்ளம் விழித்திருக்கும்
உன்னையே நினைத்தபடி.....


காற்றுப் புகாதபடி
நான்
போர்த்திக் கொண்டிருந்தாலும்

இனியவனே....

விட்டுக் கொடுப்பதிலும்
பிறரைத்
தட்டிக் கொடுப்பதிலும்
இன்பம் இருப்பதனை
விளங்க வைத்தவன் நீ..!
என்னை
விளங்கிக் கொண்டவன்.....

வாழ்வை ரசிப்பதற்கும்
பிறர்
ரசிக்க வாழ்வதற்கும்

Saturday, December 18, 2010

ஆசையாய் ஒரு நாள்.....

அடித்து எழுப்பும்
அலாரம் இல்லாத தூக்கம்..

கண் விழிக்கும் போது
கணவன் நீட்டும் காபி....

நிதானமாய் அமர்ந்து
பேப்பர் படிக்க நேரம்.....

பரபரப்பில்லாமல்

Friday, December 17, 2010

கனவும், கவிதையும்

தினசரி வாழ்வுக்கான
வேலை
நூற்றாண்டுகளாய்
சொல்லப்பட்ட கடமைகள்
நானாகவே 
ஏற்படுத்திக்கொண்ட 

பிரிவு ...1

எனைப் பிரிந்து
வெகு  தூரத்திலிருக்கும்
என் பிரியத்துக்குரியவனே...
உனைப் பிரிந்திருக்கும்
நேரத்திலும்
நான் மகிழ்ந்திருக்கிறேன்...


ஓராயிரம் வேலைகளில் நீ 
ஓயாமல் சுழன்றதினால் 
எனக்கான நேரம்

Wednesday, December 15, 2010

சந்தித்த வேளையில்....

கண்களை கூராக்கி அவள் மீண்டும்  பார்த்தாள்.  அவன் தானா? இல்லை, அவள் கண்கள் அவளை எப்போதும் ஏமாற்றியிருக்கவில்லை. அவனேதான். அதே இறுக்கமான முகம். சற்றே கறுத்த உதடுகள். சுருண்ட தலைமுடி. நீண்ட கைகளும், கால்களும். சற்றும் பருமன் ஏறாமல் அப்போது பார்த்த அதே உடல் வாகு. தலைமுடி நரைத்திருக்கிறதா என்று கவனித்தாள். இல்லை. பல முறைகள் அவள் ரசித்த அந்த சுருண்ட முடி நரைத்திருக்கவில்லை.

அந்த குட்டி அறையில் இருந்து வெளியில் தெரியும் தூரம் குறைவானதாக இருந்தது.  இன்று நிறைய கூட்டம். அந்த கூட்டத்தில் அவன் அவள் கண்களிலிருந்து  மறைந்து போனான். துழாவித்தேட இயலாதபடிக்கு

Saturday, December 11, 2010

நீயும், கவிதையும்.....

முன்பே
திட்டமிட்டப்பட்டது தான்
என்றாலும்
சந்திக்கும் போது
உன் முகம் பார்த்து
சிதறிப் போகிறேன்....



சிதறிய என்னை
மீண்டும்
சேர்த்தெடுக்கும்
நேரம் முடியுமுன்பே

Thursday, December 2, 2010

விடாமல் தொடரும் அடை மழையில்

வீதியோரத்துச் சின்னக் குடிசைகள்......

விழிகளில் மழை...!

Friday, November 26, 2010

(எலும்பு முறிவு, அறுவை சிகிச்சை என்று படுத்திருந்த நேரம் எழுதியது....இரண்டு வருடம் முன்பு..... சும்மா ஒரு "திரும்பிப் பார்க்கிறேன்" தான்....)
**********************************************************************************************
அன்பான எலும்புகளே.....

எத்தனைதான்
உங்களுக்குள்
சண்டையென்றாலும்
பேசித்
தீர்த்திருக்கலாம்...!

என்ன
பிரச்சனை என்று

Thursday, November 25, 2010

என் பிறந்த நாளில்

பிறந்த நாளில் வாழ்த்திய அனைவருக்கும் நன்றி....
வீட்டுக்கு வந்து வாழ்த்திய சுகன், வதனா, ஜோதிக்கு நன்றி...சுகன்  எனக்களித்த கேக் இங்கே.......அன்பின் இனிமை....

Tuesday, June 1, 2010

கல்லாய் நீ

கழுத்தில் தாலியும் ,
இடுப்பில் அரைமூடியும்
மட்டுமே அணிந்தபடி
நளினமாய் தான் நிறுத்தப்பட்டிருக்கிறாய் நீ....

போற்றி போற்றி என்று
மெய் மறந்து பாடியபடி
கரம் கூப்பி அமர்ந்திருக்கின்றனர்
எதிரே எத்தனையோ பெண்கள்.....

எண்ணெய் தடவிவிட்டு
மஞ்சள் முழுக்காட்டி
எத்தனையோ திரவங்களால்
நீ மூச்சு திணற,
குளிரால் விறைக்க
உன்னை குளிப்பாட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.....

எனக்கென்னவோ
உடலே கூசுகிறது.....
என்ன தான் நீ கல்லாய் நின்றாலும்
அர்ச்சகர்கள் ஆண்கள்ஆயிற்றே ......

கிருஷ்ணப்ரியா

(நன்றி: சௌந்தர சுகன்)

Monday, April 19, 2010

நீயும் உன்னில் அவளும்

நீயும், உன்னில் அவளும்.


தீண்டலும்,
தீண்டாமையும் இல்லாத
தூயவள் என்று
உன்னைச் சொல்லிக் கொள்கிறாய்..

நாற்பது வயதிலேயே
பேரன் பேத்திகளுடன்
கொஞ்சி குலாவுவதை
பெருமையாய் பேசுகிறாய்.....

துணைவி ஒருத்தியின்
கதகதப்பில் இருந்தபடி
உன்னை
அடித்து துவைத்து
அலட்சியப்படுத்தும் கணவனை
மாமியார் என்ற பெயரின்
கௌரவம் காக்க
சகித்துப் போகிறாய்.....

இப்படி
சிரித்து சிரித்து
உன் சகிப்பை
நீ சொல்லும் நேரங்களில்
எனக்குத் தெரிகிறாள்...
உன்னுள் இருக்கும் பெண்ணொருத்தி.

பதினாறு வயதிலேயே
சமூகம் போட்ட
தாலி என்ற கைவிலங்கை
அவிழ்க்க முடியாத
கையறு நிலையில் கண்ணீர் உகுத்தபடி....


கிருஷ்ணப்ரியா, தஞ்சாவூர்.....

Sunday, April 18, 2010

என் தேரைகள்

எப்படித் தான் விரட்டினாலும்
மீண்டும் மீண்டும் வந்து விடுகின்றன
குட்டிக் குட்டியாய்
தேரைக் குஞ்சுகள்...

விரட்ட எத்தனிக்கும் ஒவ்வொரு பொழுதிலும்,
தட்டிவிடுதலும், உடைந்து சிதறலும்
தவறாமல் நிகழ்கிறது....

எப்போது வருமோ
என்று பயந்தபடியே தான் திறக்கிறேன்
காற்றோட்டமான சமையலறைக்காக
ஆசையாய் வைத்த
சன்னல் கதவுகளை.....

அருகேயே நிற்கும்
வாழை மரங்கள் தான்
தேரைகளை வளர்க்கும்
குளிர்ந்த சூழல் என்று
அம்மா எடுத்துச் சொன்னாலும்
வெட்டிவிட மனம் வரவில்லை
தேரைகளின் இருப்பிடத்தை....

வாழ்க்கையின் எத்தனையோ சிக்கல்கள்
இப்படித்தான்...

எடுக்க வழியிருந்தும் மனமில்லாமல்
அப்படியே சிக்கலாய்.....

கிருஷ்ணப்ரியா, தஞ்சாவூர்.



(நன்றி: சௌந்தர சுகன்)

Tuesday, April 13, 2010

புதிது

எதுவும் எழுதாமல்
இலக்கியம் சேராமல்
வீணாகிப் போனதே
பல வருடங்கள் என்று
ஏங்கி நின்றபோது
ஓடி வந்து கட்டிக்கொண்டது
என்
பத்து வயது கவிதை.....

ஆசை

உப்பு குறைந்ததற்காக

குழம்பை தலையோடு கொட்டிய

தாத்தாவைப் பற்றி

கதை சொல்லும் பாட்டி

எப்போதும் முடிக்கிறாள்

அவருக்கு என் மேல

ரொம்ப ஆசை என்று சொல்லி.

ஒவ்வொரு முறையும்

புரியாமல் யோசிக்கிறேன்

ஆசைக்கான அர்த்தத்தை..

----கிருஷ்ணப்ரியா, தஞ்சாவூர்

நன்றி : உயிரோசை இணைய இதழ்.