Tuesday, April 13, 2010

ஆசை

உப்பு குறைந்ததற்காக

குழம்பை தலையோடு கொட்டிய

தாத்தாவைப் பற்றி

கதை சொல்லும் பாட்டி

எப்போதும் முடிக்கிறாள்

அவருக்கு என் மேல

ரொம்ப ஆசை என்று சொல்லி.

ஒவ்வொரு முறையும்

புரியாமல் யோசிக்கிறேன்

ஆசைக்கான அர்த்தத்தை..

----கிருஷ்ணப்ரியா, தஞ்சாவூர்

நன்றி : உயிரோசை இணைய இதழ்.

8 comments:

  1. chinnathai oru kavithai yendralum manathai thottu unarvai vooduruvum varigal.... keep it up... thodarnthu malarattum kavi pookkal...

    -----Surya

    ReplyDelete
  2. அதற்குப் பெயர்தான் அசட்டுக் காதல்

    ReplyDelete
  3. arumai...ithu pengal thangaluku thaangalae sollikolum saaljaapu...

    ReplyDelete
  4. ஒவ்வொரு கவிதைக்கும் நீ தந்திருக்கும் கமென்ட்ஸ்க்கு நன்றி அருண். பெண்கள் சால்ஜாப்பு சொல்லாமல் காரியத்தில் இறங்கினால் இந்த உலகம் தாங்குமா....?

    ReplyDelete
  5. kandipaaga thangum...infact innum vegamaaga munnerum...

    ReplyDelete
  6. உண்மையில் அது பாட்டி மீதான தாத்தாவின் ஆசை அல்ல . பாட்டிக்குள் உள்ள தாத்தா மீதான ஆசை . எவர் மீது நமக்கு மித மிஞ்சிய ஆசை இருக்கிறதோ அவரின் அத்துமீறல்கள் கூட ஆனந்தமான ஒன்றோ அல்லது மறக்க கூடிய ஒன்றாகவோ ஆகிவிடும் , குழந்தையின் அடமெல்லாம் நமக்கு கொண்டாட்டம் ஆக இருப்பது போல ..

    ReplyDelete
  7. மிகச் சரியாகச் சொன்னீர்கள் பாரதி... ஆசையும், அன்பும் அத்து மீறல்களை அனுமதித்து விடுகிறது... பிறகு வருந்தவும் செய்கிறது... தங்கள் வரவுக்கும், பதிவுக்கும் நன்றி தோழர்...

    ReplyDelete
  8. நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

    நன்றி
    யாழ் மஞ்சு

    ReplyDelete