பாக்கெட்டுக்களில் அடைத்த 
பாலையும் தயிரையும் 
வாங்கி ருசிக்கும் மக்கள்
மறந்தே போனார்கள்
அரிசி கழுவிய
உளுந்து களைந்த
கழனி நீருக்காக
வாசலில் வந்து நிற்கும் மாடுகளை.......
பொட்டல் திடலில் 
காகிதங்களையும்
பிளாஸ்டிக் உறைகளையும்
மிச்சம் வைக்காமல் 
தின்று முடிக்கும்  மாடுகள்
நீருக்காக ஒதுங்குகின்றன 
குடியிருப்புகளின் 
கழிவு நீர் பாதைக்கருகில்.........
நன்றி: கல்கி வார இதழ். 
மாடுகளும் கழிவுநீர் குடிக்கப் பழகிவிட்டன. நாமும் அரிசி உளுந்து கழுநீர் மற்றும் எஞ்சிய உணவுப் பொருட்களை கழிவுநீர்க் கால்வாயில் வீசியெறியப் பழகிவிட்டோம். (எங்க வீட்டு இப்படியான சமாச்சாரங்கள் தோட்டத்து செடிகளுக்கு தாரை வார்க்கப்படுகிறது)
ReplyDeleteஇருப்பினும் கவிதை சிறு குறுகுறுப்பை உண்டாக்க வல்லதாய்... அவரவரால் ஆன ஜீவகாருண்ய செயல்களை வழக்கொழிக்காமல் இருப்பது நன்று.