Monday, May 23, 2011

வேறு வேறு சிகரங்கள் .....

அருகருகே இருந்து கொண்டு
நாம்
 பறக்கவிட்ட முத்தங்கள்
 அறை முழுதும்  வியாபித்து
எனை
வெட்கத்தில் நனைக்கிறன   ....

விரல் கூட படாமல் 
விழிகளால் நீ தீண்டிய  
அங்கங்கள் 
நிலவு வரும் நேரத்து 
அல்லி மலராய் 
மெல்ல விரிகின்றன....

என்
அனிச்சபூ இதழ்களில்
நீ
அழுத்தமாய் தருகின்ற
ஒரேயொரு முத்தமே 
 என்னை 
சிகரமேற்றிவிடும்  என்றால் 
நம்ப மறுக்கிறாய்.....

சிகரம் தொட்டபிறகு
மூச்செடுக்கக் கூட 
இடமோ நேரமோ 
இல்லாத சூழலில் 


எப்படி புரியவைப்பேன் உனக்கு.....


என் சிகரமும்
உன் சிகரமும் 
வேறு வேறு வகையென்று........ 


நன்றி: சௌந்தர சுகன்




3 comments:

  1. ஏற்கெனவே கவிதையை கேட்டாலும் அதை படிக்கும்போது இன்னுமாய் பல நினைவுகளை கிளருகிறது. அழகான கவிதை.

    ReplyDelete
  2. ஒரு வழியாய் சுதாரித்துக் கொண்டவனாய் , உடை மாற்றிக் கொண்டு, முகம் கழுவி, சாப்பிட அமர்ந்தேன்.சாப்பிட்டு முடிந்ததும் “சுகன்” இல் வந்திருந்த கிருஷ்ணப்ரியாவின் “வேறு வேறு சிகரங்கள்” என்ற கவிதையினை வாசிக்கத் தொடங்கினேன்.கவிதையில் மூன்று வரிகள் மிச்சம் இருக்கும் போது கிஷோரிடமிருந்து அழைப்பு.//

    என்று ”இத்தனை சாமிகளா?”என்ற பதிவில் இந்தக் கவிதையைப் பற்றி சொல்லியிருப்பேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு... சந்தோசமாய் இருக்கு ப்ரியா

    ReplyDelete
  3. இன்னும் கொஞ்சம் நெருக்கமாக எழுதியிருக்காலாமோ ப்ரியா...

    ReplyDelete