“வா கவிதா, பையனை அழச்சிட்டு வரலயா?”.. என்ற படி கதவைத்திறந்தாள்
மேகலா.
“இல்லண்ணி, அவர் வீட்ல இருக்கார், அதான் விட்டுட்டு வந்தேன்” என்ற
கவிதாவின் குரல் சுருதி இல்லாமல் இருந்தது. கையில் இருந்த சின்ன
கூடையை கதவருகில் வைத்தாள்.
“என்னங்க, கவிதா வந்து இருக்கா பாருங்க” என்றபடி ரூமைப்பார்த்து குரல்
கொடுத்த மேகலா, “ஏன் கவிதா, வாட்டமாய் இருக்க? சரவணன் வேலைக்குப்
போறாரா? ஏதும் பிரச்சனையா?” என்று கேட்டாள்.
