Monday, August 20, 2012

ஆனந்தம்......

உங்கள் காலத்தில்
அலைபேசிகள் இல்லையா....

திரைப்படங்களை
வானொலியில் கேட்டீர்களா...

பள்ளி வாகனம் இல்லாமல்
எப்படி பள்ளிக்குப் போனீர்கள்..

கணிணிகள் இல்லாத வாழ்வு
கசப்பாயில்லையா

விதவிதமாய்
கேள்விக்கணைகள் வீசும்
என்
குட்டிக்கவிதையை
அணைத்தபடி சொன்னேன்..

நாங்கள்
அப்போது தான் இருந்தோம்
ஆனந்தமாய்....

6 comments:

  1. நல்ல வரிகள்...

    /// நாங்கள்
    அப்போது தான் இருந்தோம்
    ஆனந்தமாய்.... ///

    அருமையாய் முடித்துள்ளது சிறப்பு...

    தொடருங்கள்... வாழ்த்துக்கள்.... நன்றி...

    ReplyDelete
  2. ச‌பாஷ் ப்ரியா! அப்போதிருந்த‌ ஆன‌ந்த‌ம் இப்போதைய‌ ஆர‌வார‌ங்க‌ளுக்கில்லை.

    ReplyDelete
  3. அக்கா, கவிதை மிகவும் நன்றாக இருக்கிறது. இறந்தகாலம் நன்மையில் முடிந்து இருந்தால் அதை நினைத்துப்பார்ப்பது எப்போதும் ஒரு சுகமான அனுபவம்தான்.
    ஒரு சிறிய அலசல்: 2011 ஆகஸ்ட் மாதம் வரை 24 பதிவுகள் உனது வலையில்.... ஆனால், 2012 ஆகஸ்ட் மாத முடிவில் வெறும் 5 பதிவுகள்தான். உன் கவிதை வலைப்பதிவில் ஒட்டடைஅடிப்பது எந்த சக்தியாக இருந்தாலும், அதை நீ முறியடிக்க நான் ஆண்டவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  4. முந்தின தலைமுறை எல்லோருமே ஏங்கும் அந்த நாட்கள்!
    மிக அருமையாக கவிதையில் சொல்லு இருகிறீர்கள்!
    வாழ்த்துக்கள்!
    தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  5. முற்றிலும் உண்மை. நல்ல கவிதை.

    ReplyDelete