Tuesday, November 13, 2012

இதுவும் சந்தோஷம் தான்.....


பண்டிகைக்குஇன்னும்ஒருசிலதினங்களேஇருந்தது.

துணிமணிகள்எடுத்தாயிற்று!

பலகாரங்கள்….. 

அதுபற்றிபேசித்தான்காலையில்அலுவலகம்

கிளம்பும்போது

எரிச்சலாகிவிட்டாள்மாலா.


இருகுழந்தைகளின் தாயான மாலாவுக்கு வீட்டில் 

இருக்கும் நேரமே

மிகவும்குறைவு.வீட்டிலிருந்து கிட்டத்தட்ட1 மணிநேர பேரூந்து பயணத்தில் இருந்தது அவளது அலுவலகம்.                                
அவள்   கணவனோ மாதத்தின் பாதிநாள் ஆபீஸ் டூர் போக வேண்டியவன்.    காலையில் பிள்ளைகளை பள்ளிக்குக் கிளப்பி இரண்டு தெரு தள்ளியிருந்த அவள் அம்மா வீட்டில் பள்ளிவேனுக்காக கொண்டு வந்து விடவேண்டும்.                          
அப்படியே   இருச்சக்கர வாகனத்தை பேரூந்துநிலையத்தில் நிறுத்தி சீட்டு வாங்கிக்கொண்டு ஓட்டமும் நடையுமாய் பேருந்தைப் பிடிததால்தான் நேரத்துக்கு  அலுவலகம்போகமுடியும் .  அங்கேயோ தட்டச்சுப்பணிஅவளுக்குதினமும் தட்டச்சு செய்து செய்து முதுகுவலி
நிரந்தரமாகி விட்டது.இப்போது கிடைக்கிற ஒரு
ஞாயிற்றுக்கிழமை 
விடுமுறை வீடு ஒதுக்குவதிலும், மாவரைத்து குளிர்சாதனப்பெட்டியில் வைப்பதுமாய் பரபரப்பாய்கழியும். இந்த கூத்தில் பண்டிகைக்கு பலகாரம்
செய்யவாமுடியும்அவளால்கடையில் வாங்கி விடுவாள்இன்று காலையில்
பள்ளிக்கு கிளம்பும் போது பெரியவன் தான்
ஆரம்பித்தான்.“அம்மா, இந்த வருஷம் கடை பலகாரம் வேண்டாம்மா, நீங்களே முறுக்கு, அதிரசம் மட்டுமாவது பண்ணுங்கம்மா,ப்ளீஸ்…”  

சின்னதும் அவனோடு சேர்ந்து கொண்டது.
ஆமாம்மா… 
போன வருஷம் பக்கத்து வீட்டு ஆண்டி கொடுத்த மாதிரி ரவாலாடு செய்யுங்கம்மாஎன்று அதிகப்படியான இன்னொரு பலகாரத்தையும் சேர்த்தான்
இல்லடாகண்ணுஅம்மாவுக்கு நேரம் இருக்காது,  
கடையிலே வாங்கிக்கலாம்
சொல்லிமுடிக்கும்முன்,“போங்கம்மா, நான்கடைபலகாரம்சாப்பிடமாட்டேன்,
நீங்கதான்செய்யனும்என்றுஅழஆரம்பித்தான்சின்னவன்.
நேரம்ஆகிகொண்டுஇருந்தது. மாலாவுக்கு அவளது அவசரம் புரியாத பிள்ளைகள்
மீதுகோபம்வந்தது. இரண்டுஅடிவைத்தாள்சின்னவனைஅம்மாவின்கோபமானமுகபாவமும், அடிதந்தவேதனையும்அவனைஅப்படியே
வாய்மூடவைத்தது. “கொஞ்சம்கூடபுரிந்துகொள்ளாதபிள்ளைகள். பக்கத்துவீட்டிக்காரிவீட்டிலேயேஇருக்கா,
எனக்குஇந்தஅலுவலகத்தைவிட்டொழிக்க
முடியுதா?வீட்டுக்கும்ஆபீசுக்குமாஓடியே
ஓடாய்தேயுறேன், முறுக்குவேணுமாம்,முறுக்கு….”வண்டியில்அம்மாவீட்டுக்குவரும்வரைபிள்ளைகளைத்
திட்டிக்கொண்டேவந்தாள்.“சீக்கிரம்இறங்கு”, திட்டிக்கொண்டேஇறக்கிவிட்டாள்கழுத்துவலிக்காககழுத்தில்பட்டைஅணிந்து
நின்றிருந்தஅவள்அம்மாகுழந்தைகளின்அழுத
முகத்தைப்பார்த்துமுகம்மாறியவளாய்
என்னடிஆச்சுஎன்றபடிவந்தாள்.    பதில்சொல்லாமல்வண்டியைத்
திருப்பி, பேரூந்துநிலையம்வந்து விட்டாள்மாலா.

பிள்ளையை அடித்து விட்டதை நினைத்துவேலை

நேரத்திலும் வருத்தப்பட்டாள் மாலா.

ஆனால் அடிக்காமல் என்ன செய்வது என்றுதான்

ஆயாசமாய் இருந்தது.

கடனை வாங்கி வீட்டைக் கட்டியாகிவிட்டது.

வேலையை வேண்டாம் என்று சொல்லிவிட்டால்

பணத்துக்கு என்ன செய்வது? பலகாரம் செய்வதா முக்கியம்?….. குழப்பத்திலும்கோவமாய்வந்ததுமாலாவுக்கு.

மதியஉணவுஇடைவேளை.

  வேலைக்கு நடுவே கிடைக்கிற ஓய்வுநேரம்

இது மட்டும்தான் என்பதால் எல்லோரும்

அரட்டையுடன் மிகவும் மெதுவாகச் சாப்பிட்டுக்

கொண்டுஇருந்தனர்.
 
-2செக்ஷன்சுப்புலட்சுமிகேட்டாள்.

ஏய், யாருக்கெல்லாம்பண்டிகைபட்சணம்வேணும்?.  

எங்கதெருவிலேஒருஅம்மா,நாமதர்றஆர்டருக்கு

செஞ்சுதராங்க

ரொம்பநல்லாபண்றாங்கப்பா,செலவும்கம்மி

தான்.நான்நூறுமுறுக்கு

நூறுஅதிரசம்,நூறுமைசூர்பாகுசொல்லபோறேன்

வேறயாராவதுஆர்டர்தர்றீங்களா?”  

பொதுவாகக்கேட்டாள்.

பரவால்லையே”………….”எவ்வளவுரூபாஆகும்”……

…..”நேரத்துக்குகிடைக்குமாபலவிதமான

கேள்விகள்எல்லோரிடமும்இருந்துவந்ததது.  

மாலாவும்சேர்ந்துகொண்டாள்.“ரவாலாடுபுடிச்சுத்

தருவாங்களா?”, 

சின்னவன்முகத்தைமனதில்வைத்தபடி

அவளும்கேட்டாள்.

ரெக்கார்டுகிளார்க்புனிதவதிமட்டும்பேசாமல்

இருந்தாள்.“என்னபுனிதா

உனக்குஎதுவும்வேண்டாமா?”சுப்புலட்சுமிகேட்க

எல்லோரும்அவளையேப் 

பார்த்தனர்.“இல்ல,நானேசெஞ்சுடுவேன்” 

சிரித்தபடிசொன்னாள்புனிதவதி

போடிஇவளே….ஆபீஸ்முடிஞ்சுவீட்டுக்குப்போனா,

அக்கடானுபடுக்கனும்போலஇருக்கு,இதில,

இதெல்லாம்எப்படிசெய்வ

தேவையில்லாதகஷ்டம்.பேசாமநீயும்ஆர்டர்

கொடுத்துட்டுநிம்மதியாஇரேன்”.

வேலையைமுடிச்சுட்டுவீட்டுக்குப்போனாஅலுப்பா

தான்இருக்கும்சுப்பு

அந்தகாலத்திலேஎங்கஅம்மா,பத்துநாளைக்கு

முன்னாடியேகொல்லைப்பக்கம்அடுப்புவச்சு,

முறுக்குசுடஆரம்பிப்பாங்க

ஒவ்வொருமுறுக்காஎடுக்கஎடுக்கசுடச்சுட

எடுத்துகிட்டுஓடுவோம்

பெரியடின்நிறைய 

அம்மாமுறுக்குசுட்டுவைப்பாங்க.

தினமும்பள்ளிக்கூடம்விட்டுவந்தாஅந்தமுறுக்கு

டின்னைதான்   

தேடிஓடுவோம்டின்ன திறந்து கையை

உள்ளே விட்டா சில்லுனு ஒரு காத்து 

கைலபடும்.  

அந்தமுறுக்கு ருசி

இப்பவும்நாக்குலஇருக்குசுப்பு

உங்கஎல்லோருக்கும்கூடஅந்தஅனுபவம்நிச்சயம்

இருக்கும்.  

இப்பகாலம்மாறிபோச்சு.பண்டிகைன்னா

டி.வி.யும்  

சினிமாநிகழ்ச்சியும் ரெடிமேட்பலகாரமுமா

மாறிபோச்சு

நான் பண்டிகைக்கு முந்தின ரெண்டுநாள் ராத்திரி

பிள்ளைகளைப் பக்கத்துல  

வச்சுகிட்டுஎன்னாலசெய்யமுடிஞ்ச ஒன்னுரெண்டு

பலகாரமாவது நிச்சயமா செய்வேன்.அப்ப

பிள்ளைங்க முகத்தில தெரியுற 

சந்தோஷத்துக்கு முன்னால நம்மஅலுப்பெல்லாம்

ஓடிபோய்டும்சுப்பு

நாம சின்னபிள்ளைல அனுபவிச்சு

பரவசப்பட்ட எல்லா சந்தோஷத்தையும்

இப்பத்த பிள்ளைகளுக்குத் தரமுடியாதுதான்.

டி.விமுன்னாடிஉட்காராம

செல்போன்பேசாம,நாமபிள்ளைகளோடபேசிகிட்டே

கஷ்டப்பட்டுபலகாரம்செய்யறஅந்தநேரம்என்னைப்

பொறுத்தவரைக்கும் ரொம்ப சந்தோஷமானநேரம்

அந்தசந்தோஷத்தை இழக்க மனமில்லைஎனக்கு”, 

பேசி முடித்துவிட்டு பாத்திரம் கழுவ எழுந்தாள்

புனிதவதி. அப்படியேஅமர்ந்திருந்தாள்மாலா.

இந்தபுனிதாஎப்பவுமேஇப்படித்தான்.நீசொல்லு

மாலா. உனக்குஎன்னஆர்டர்?” 

என்றாள் சுப்புலக்ஷ்மி.

இல்லசுப்பு.  

இந்த வருஷம் நானும் பலகாரம் பண்ணப்

போறேன். எனக்கு எதுவும் வேணாம்”, 

சொல்லிவிட்டு எழுந்த மாலாவுக்கு மனசுலேசாகி

இருந்தது

மாலையில் வீட்டுக்குப்போனதும் பிள்ளைகளிடம்

சொல்லவேண்டும்

ஹையாஎன்று குதிக்கும் தன் குழந்தைகளைக்

கற்பனை செய்ததில் அவளுக்குக் கண்கலங்கிற்று

சந்தோஷத்தில்

2 comments:

 1. ப்ரியா, இனிமையாக‌ க‌ழிந்த‌தா ப‌ண்டிகை?! நித‌ர்ச‌ன‌ம் எப்போதும் உங்க‌ ப‌டைப்புக‌ளில் பாய‌ச‌த்து முந்திரியாய்.அவ‌தார‌ங்க‌ள் ப‌ல‌ எடுத்தாலும் தாய்ம‌ன‌சும் அத‌ன் த‌விப்பும் தான் பெண்ணுக்கு ஆதார‌ சுருதியாய்...!

  ReplyDelete
 2. வணக்கம் சகோதரி...

  சுவாரஸ்யமான பகிர்வு... பாராட்டுக்கள்...

  உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_29.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  ReplyDelete