Sunday, June 19, 2016

முக்கூடலில் ஒரு இலக்கிய குளியல்...

வெகு நாளாயிற்று வலைப் பக்கம் வந்தே.... முகநூல் போவது போல் வலைதளம் வராமல் இருப்பது ஒரு குறையாகவே இருந்தது. இதோ, மீண்டும் வந்தாச்சு...

ஒரு வருடத்துக்குப் பிறகு முதல் பதிவாக இன்றைய நிகழ்வையே போடலாமே....

இன்று 19/6/2016 நாகப்பட்டினம், சாம் கம்ல் அகடமியில் நடைபெற்ற முக்கூடல் நிகழ்விலிருந்து.............

வாசகப் பார்வையாளர்கள் 
கவிஞரும் தமிழ்ப்பல்கலைக்கழக பேராசிரியருமான தெ.வெற்றிச்செல்வன் கிட்டத்தட்ட 12 வருடங்களாக முக்கூடல் என்றொரு இலக்கிய அமைப்பை நடத்தி வருகிறார். இன்று அந்த அமைப்பின் 133 வது நிகழ்வு அருமையான நிகழ்வாயிருந்தது..
வெற்றிச்செல்வன்

வழக்கம் போல மோகன் இங்கர்சாலின் தமிழிசையுடன் சரியான நேரத்தில், காலை 10 மணிக்குத் துவங்கிய முக்கூடல் 133 வது நிகழ்வு,
மோகன் இங்கர்சால்
மனுஷ்யபுத்திரனின் "கால்கள்" என்ற  கவிதைக் காட்சியுடன் கூடுதலாக "பென்சில்" என்ற குறும் படத்தையும் கண்களுக்கும், சிந்தைக்கும் விருந்தாக வழங்கிற்று....
தொடர்ந்து கதைசொல்லல் நிகழ்வில் நெய்வேலி பாரதிக்குமார் எழுதிய " சுழியம்" கதையை நான் சொன்னேன். பாரதிக்குமாரின் எழுத்து உணர்வு பூர்வமானது. அவரது எழுத்தை ஒரு துளிக் கண்ணீராவது சிந்தாமல் படிக்க முடியாது என்பதை சொல்லிவிட்டுத் தான் கதையைத் துவங்கினேன்.
கதையை மிகுந்த ஆர்வத்துடன் கேட்டார்கள் அனைவருமே. பாரதியின் எழுத்தின் வீரியத்தை என்னால் சொல்லில் வழங்க முடிந்ததோ என்னமோ தெரியவில்லை.  ஆனால், சிறந்த சிறுகதை எழுத்தாளரான பாரதிக்குமாரின் கதையை வழங்கிய நிகழ்வு மிகுந்த மன நிறைவைத் தந்தது.

எழுத்தாளர் புலியூர் முருகேசன் எழுதிய " உடலாயுதம்" நாவல் குறித்த மிகச்சிறப்பான அறிமுகவுரையை கவிஞரும் அன்புக்குரிய நண்பருமான ஸ்டாலின் சரவணன் வழங்கினார்.
ஸ்டாலின் சரவணன்
நாவலை பல கோணங்களில் அணுகிய அவரது உரை நாவல் படிக்க வேண்டுமென்ற ஆவலை எல்லோரிடத்தும் ஏற்படுத்தியது.
ஸ்டாலினின் அருமையான நூல் அறிமுக உரைக்குப் பின் மிக நெகிழ்வான ஏற்புரையை எழுத்தாளர் புலியூர் முருகேசன் வழங்கினார்.
புலியூர்முருகேசன்

தந்தையர் தினத்தை முன்னிட்டு  நேயர் விருப்பமாக இரண்டு முறைகள் கவிஞர் ஏகாதசி எழுதிய அப்பா பாடலைப் பாடி அனைவரையும் நெக்குருகச் செய்தார் மோகன்.

இலக்கிய நிகழ்வுகள் இன்னும் பயணிக்க வேண்டிய பாதை குறித்தும், இலக்கியவாதிகள்
அரிமா அருண்
முன்னெடுக்க வேண்டிய செயல்கள் குறித்தும் தன் அனுபவத்திலிருந்து பேசினார்  தோழர் அரிமா அருண்.
நாகை ஜவஹர்
நாகை ஜவஹர் நன்றியுரை வழங்கினார்.

எப்போதும் போல நிகழ்வை மிக நேர்த்தியாக வடிவமைத்து, அழகாக ஒருங்கிணைத்து நடத்திச் சென்றார் அன்புக்குரிய வெற்றிச்செல்வன்.

இலக்கிய அமைப்பை நடத்துவதிலும், சிறந்த பங்கேற்பாளர்களைக் கொண்டு அதை தொடர்ந்து கொண்டு செல்வதிலும் உள்ள சிரமங்களை இயல்பாக கடந்தபடி, முக்கூடலை தரமாக நடத்திக் கொண்டிருக்கும்
வெற்றிச்செல்வனுடன் கூடப் பயணிப்பதில் மிகுந்த நிறைவும் மகிழ்வும்.....


நன்றி: வாங்க ப்ரியா வலைப்பக்கத்துக்கு என்று எப்போதும் என்னை தூண்டி, மீண்டும் இங்கே எழுத வைத்திருக்கும் என் பிரியத்துக்குரிய நிலாவுக்கு......

4 comments:

 1. தங்களின் வருகை தொடர் வருகையாகட்டும்

  ReplyDelete
 2. நன்றி அய்யா. இனி தொடர்வேன்

  ReplyDelete
 3. மகிழ்வும் நன்றியும் ப்ரியா... இயங்கிக் கொண்டே இருக்கும் தங்களை பெருமிதம் பொங்க நோக்கியபடி நாங்கள்...

  ReplyDelete
  Replies
  1. இயங்கிக் கொண்டே இருக்க வைப்பதே நீங்கள் தான் நிலா....

   Delete