Thursday, March 17, 2011

எழுதும் நேரம்....

எழுதவே நேரமில்லை
என்று
எப்போதும் புலம்புவேன்
உன்னோடான 
பேச்சுக்களில் 
என் நேரமனைத்தையும் 
செலவு செய்யும் போது.......

சின்னதாக ஊடல் வந்து 
உன்னோடு 
பேசாமல் கழிகின்ற 
நிறைய நேரங்களிலும்
எழுதாமல் தான் இருக்கிறேன்
உன்னைப் பற்றியே 
நினைத்தபடி..... 

18 comments:

  1. அட அழகாக சொல்லிவிட்டீர்கள் பல சமயம் இந்த மனநிலை எல்லோருக்கும் ஏற்படுவது இயல்பு .. எங்கோ ஒரு மூலையில் ஒளிந்திருக்கும் உண்மையை இழுத்து வருவதுதான் கவிதை ... மிக சிறந்த கவிதை

    ReplyDelete
  2. உண்மைதான். எப்போதும் எதையேனும் மனதுதான் பிறந்து விவரம் தெரிந்தது முதல் இறக்கும் வரை எழுதிக்கொண்டேயிருப்பது. காட்சிப்படுவது கண்ணுக்குப் புலனாக வைக்கும்போதுதான். எளிமை. அழகு.

    ReplyDelete
  3. இயலாமையில் பிறரை அல்ல நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் தருணங்கள் இப்படித்தான் இருக்கிறது.

    ReplyDelete
  4. அதானே.
    ...காதலிக்கும் பொது சொல்லும் பொய்யும் அழகாய்த் தான் தெரியும்

    ReplyDelete
  5. ஆகா ... பிரியத்தின் விகிதம் எப்போதும் நூறு சதம்! சிருங்காரமும் சிணுங்கலும் குறைவில்லா நெருக்கத்தில் புகாராய் ஒரு பெருமிதம்...!! குட்டிப் பையன் அழகில் கொள்ளை போகிறேன். பெரியவரா... சின்னவரா...?

    ReplyDelete
  6. மிக அருமை
    காதல் வயப்பட்ட படைப்பாளிகளின் நிலையை
    மிக இயல்பாகச் சொல்லிபோகிறது
    உங்கள் கவிதை

    ReplyDelete
  7. எழுதும் நேரம் வந்தால் அதுவே எழுத வைத்து விடும்..

    ReplyDelete
  8. ஆம்.. நினைவுகளே ஒரு சுவாரஸ்யமான கவிதை!

    ReplyDelete
  9. @ பாரதிக்குமார்

    உண்மை தான் பாரதி, இயல்பாய் வருகிற கவிதைக்கு கொஞ்சம் பலம் கூடுதலாகத் தான் இருக்கிறது. டயரியைப் புரட்டிய போது கண்ணில் பட்ட இந்த கவிதை உங்கள் பாராட்டை பெற்றதில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. உடனுக்குடன் பேசியிலும் அழைத்து பாராட்டும் உங்கள் இனிய குணம் வெயில் நேரத்தில் கிடைக்கும் இளநீராய் இனிக்கிறது...

    ReplyDelete
  10. @ஹரணி

    நீங்கள் சொல்வது சரிதான். மனம் எழுதும் எழுத்துக்கள் முடிவில்லாது நீண்டுகொண்டே இருக்கின்றது.. எல்லாவற்றையும் காட்சிப் படுத்த முடிந்தால்...?
    உங்கள் வருகையும், பாராட்டும் எனக்கு இன்னும் எழுதும் ஆர்வத்தை தருகிறது... நன்றி...

    ReplyDelete
  11. @மணிச்சுடர்
    இயலாமைக்குத் தான் எத்தனை பெயர் வைத்துக் கொள்கிறோம் இல்லையா மணிச்சுடர்? வருகைக்கும், கருத்து பதிவுக்கும் நன்றி...

    ReplyDelete
  12. @ சிவகுமாரன்

    காதலுக்குத் தான் எதையும் அழகாய் பார்க்கும் மனசு இருக்கிறது சிவகுமாரன்....
    உங்கள் வலைப்பூ பார்த்தேன், படித்தேன். அருமை.. உங்கள் வருகை என்னை மகிழ்விக்கிறது....

    ReplyDelete
  13. @நிலாமகள்

    எதையும் கவித்துவமாக எழுதும் உங்கள் கைகளுக்கு ஒரு அன்பு முத்தம் நிலா....
    குட்டிப்பையன் என் ஒரேயொரு செல்ல மருமகன். தற்சமயம் மஸ்கட் வாசி... அழகில் மட்டுமல்ல, குறும்பிலும் எல்லோரையும் கொள்ளையடிப்பவன்...

    ReplyDelete
  14. @ரமணி
    தங்கள் வருகைக்கும் கருத்து பதிவுக்கும் நன்றி.....

    ReplyDelete
  15. @ரிஷபன்

    மிக்க நன்றி ரிஷபன்... எல்லா பதிவுகளையும் படித்து, தவறாமல் கருத்துக்களையும் பதிவு செய்திருக்கும் உங்கள் அன்பில் நெகிழ்கிறேன்.

    ReplyDelete
  16. @ஆரண்ய நிவாஸ் ஆர்.ராமமூர்த்தி

    நினைவுகள் என்னும் கவிதையை எழுதாமல் யார் தான் இருக்க முடியும்..? தங்கள் வருகையும் பகிர்வும் எனக்கு உற்சாகம் தருகிறது... நன்றி,,,

    ReplyDelete
  17. Wonderful "Kavithai". But why everybody targets only 'kadhal'. Why cant it be a kavithai towards a friend, a brother, a sister, etc.
    Whatsoever, the words are good.

    ReplyDelete
  18. எழுத்து என்பது எழுதுதல் மட்டும் இல்லையே கிருஷ்ணப்ரியா..

    ReplyDelete