,
மரங்கள் வெட்டப் பட்ட அரளிகள் பூக்க முயற்சிக்கும்
மிக நீண்ட
சாலையொன்றில்
சூரியன் தகித்து இறங்கிக் கொண்டிருக்க
வெயிலால் சோர்ந்து நடந்து வந்தாள்
பொக்கை வாய் கிழவியொருத்தி...
தலைக் கவசம், இருக்கைக்கு துண்டு என்று
பறந்து வந்து கொண்டிருந்த
அந்த
இரு சக்கர வாகனம்
மெல்ல வேகம் குறைத்து
அவளை பின்னால் இருத்தியபடி
பயணத்தைத் தொடர்ந்தது....
வெயிலுக்கு பயந்து
எங்கோ ஒளிந்திருந்த
கடவுளும்
சேர்ந்து பயணித்தான்
அந்த தலைக் கவசத்துக்குள்
தன்னை மறைத்தபடியே.....
நன்றி: கல்கி வார இதழ்...
கிழவிக்காக வாகனம் அனுப்பி கூடவே பயணித்த கடவுளுக்கு நன்றி!
ReplyDeleteவெட்டப்பட்ட மரங்கள் மனிதக் கொடுமை அல்லவா!
"ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான். அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்".
ReplyDeleteமரம் வெட்டுதல் கொடுமைதான். அதை பார்த்து கவலைப்படுவதை விடுத்து நாமும் மரம் வளர்ப்போம்... ரிஷபன், தாங்கள் இதுவரை எதனை மரங்கள் வளர்த்துளீர்களோ?
அப்பாடி, நிலாமகளுக்கு முன்பு நான் ஒரு கருத்தை பதிவு செய்துவிட்டேன். வெற்றி வெற்றி வெற்றி. ஹா ஹா ஹா
மரம் வளர்க்க முடியாத பன்மாடிக் குடியிருப்பு நான் இருப்பது. முன்பு தனி வீட்டில் வாடகைக்கு இருந்தபோது பின் தோட்டத்தில் ஒரு தோட்டமே இருந்தது.. என் கவனிப்பில்.
ReplyDeleteகோயிலும் விக்ரகங்களும் கடவுளின் அடையாளங்கள் மட்டுமே... தூணிலும் துரும்பிலும் இருப்பவனவன். அவரவர்க்குள்ளிருக்கும் கருணை, இரக்கம், அன்பு எல்லாமும் கடவுள் தன்மையே.
ReplyDeleteஒன்றையிழந்து ஒன்றைப் பெறுதலென்பது இயற்கை நியதியாகிப் போனது. நெடுஞ்சாலைகள் எத்துணை அவசியமோ அத்துணை அவசியம் இழப்பை ஈடுசெய்ய மாற்று ஏற்பாடாக இருமடங்கு மும்மடங்கு மரங்களை வளர்ப்பது. நாமோ மரங்களை வெட்டிவிட்டு செடிகளை வளர்க்கிறோம்!
//அப்பாடி, நிலாமகளுக்கு முன்பு நான் ஒரு கருத்தை பதிவு செய்துவிட்டேன்.//:-)))))
உங்க படைப்புகள் சமூக உணர்வுடனான சிந்தனைகளின் வீச்சுடன் வாசிப்போர்க்குள்ளும் தீமூட்டிச் செல்பவை.
'எங்கோ ஒளிந்திருந்த' என்பதை எடுத்து விட்டு, 'எங்கே ஒளிந்தானோ/என்ற ஆயாசத்தை போக்குமாறு/ எனத் திருத்தி வாசித்துக் கொள்கிறேன் என்போக்கில்.