Sunday, June 19, 2011

அம்மா

அலுவலகத்திற்கும் வீட்டிற்குமாய்

ஓய்வில்லாது உழைத்து

அலுத்துக் களைத்துப் போகும்

எண்ணற்ற தருணங்களில்

எல்லோரிடமும்

சிடுசிடுக்கும் அம்மா

சீறுவதேயில்லை 

பத்துப்பாத்திரம் தேய்க்கும்

பத்மாவிடம் மட்டும்....


களித்துச் சிரித்திருக்கும்

எங்களுக்கான நேரங்களில்

காரணம் கேட்டால்

வீட்டிலும் வெளியிலும்

அவளும் தான் தேய்கிறாள்

என்னைப் போலவே.....

பதில் சொல்லும்

அம்மாவின் கண்களில்

எப்போதும் தெரிகிறது நெருப்பு......



நன்றி: கவண் இதழ்..

6 comments:

  1. அவளும் தான் தேய்கிறாள்
    என்னைப் போலவே.....
    அந்த நெருப்புக்குள்ளும் ஈரம் கசிகிறது..
    கவிதை அழகாக நேசம் காட்டுகிறது..

    ReplyDelete
  2. 'அவ‌ளும் தான் தேய்கிறாள்' வ‌லிய‌றிந்த‌ சொற்க‌ளின் சொடுக்க‌ல்!

    ReplyDelete
  3. நல்ல வரிகள். தொடருங்கள். திரட்டிகளில் இணைக்கவில்லையா?

    ReplyDelete
  4. அற்புதமான கவிதை. எப்போதும் எரிகிறது நெருப்பு. எப்போதும் மட்டும் அல்ல காலங்காலமாய் எரிகிற நெருப்பு அது. தாய்மை எனும் தண்ணீர்மையில் அது அடங்கிப் பிரகாசிக்கிறது மாசற்று.

    ReplyDelete
  5. சீறுவதேயில்லை


    பத்துப்பாத்திரம் தேய்க்கும்


    பத்மாவிடம் மட்டும்....


    அம்மாவின் மனித நேயத்தின் வழியே
    உங்களின் மனித நேயம் வெளிவத்துள்ளது
    அருமையான கவிதை வாழ்த்துக்கள்!

    அம்மாவைப் பற்றி நானும் என் வலையில்
    வந்து காண்க!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete