சரசரக்கும் பட்டுப்புடவை
பளபளக்கும் அணிகலன்கள்
விதவிதமாய் பூக்கள் என்று
அவளை
பகட்டாக அலங்கரித்து
அவள் அங்கே இருப்பதாக நம்பி
ஏதோ ஒரு விழா
கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்......
அவளோ
விழா முடிந்த பிறகு
நடக்கப்போகிற
அன்னதானத்திற்காய்
பசியோடு காத்திருக்கும்
பிள்ளைகளின் நடுவில்
ஓடி விளையாடுகிறாள்
பாவாடைச் சிறுமியாக......
நன்றி; கவண் இதழ்..
இதைத் தான் 'இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறாய் ஞானத் தங்கமே' என்று பாடிவைத்தாரோ அக்காலச் சித்தர்!
ReplyDeleteஅம்மா எப்படியிருக்காங்க ப்ரியா?
@நிலாமகள்
ReplyDeleteஉண்மை நிலா... ஒரு கோயிலில் எனக்கு ஏற்பட்ட உணர்வு தான் இந்த கவிதை..... கோயில், கடவுள் இதற்கெல்லாம் என்ன அர்த்தம் என்று சில சமயம் தோன்றுவதுண்டு....
நலமா நிலா? அம்மா இப்போ கொஞ்சம் தேவலாம். வலியிலிருந்து முழுசாய் இன்னும் விடுபடவில்லை....
மிகவும் அழகு.
ReplyDelete