Saturday, December 18, 2010

ஆசையாய் ஒரு நாள்.....

அடித்து எழுப்பும்
அலாரம் இல்லாத தூக்கம்..

கண் விழிக்கும் போது
கணவன் நீட்டும் காபி....

நிதானமாய் அமர்ந்து
பேப்பர் படிக்க நேரம்.....

பரபரப்பில்லாமல்

பாடியபடியே குளியல்.....

இறக்கைக் கட்டிக் கொள்ளாத
இன்முக சமையல்....

யாரும் இடித்து விடாத
இதமான பேருந்து பயணம்...

எரிச்சலுடன் தள்ளப்படாத
அலுவலக வருகைப் பதிவேடு...

பதட்டமின்றி செய்ய வாய்க்கும்
பண்பான வேலை....

மல்லிகைப்பூ வாங்கியபடி
மாலை நேரம்...

சொல்லாமலேயே படிக்கும்
சமர்த்துப் பிள்ளைகள்...

எல்லோரும் அமர்ந்து
இரவு சாப்பாடு...

ஒரு மணி நேரமாவது
உறவாடும் புத்தகம்....

அவசரமில்லாமல்
அணைகின்ற விளக்கு....

கனவுகளை காட்டுகின்ற
நிம்மதியான தூக்கம்....

என்றேனும் விடியும் 
இப்படியும் ஒரு நாள்......!

(நன்றி: தினமலர்- பெண்கள் மலர்)






3 comments:

  1. நம்பிக்கை துர்ர்ந்துபோகாத படைப்புத்தான் இன்றைய தேவை.

    ReplyDelete
  2. அற்புதமான உணர்வுகள்.பெண்ணுக்கே உரித்தான
    எண்ணங்கள்.அழகான சின்ன சின்ன வார்த்தைகள்.உங்களின் கவிதை படித்த பின் எனக்கும் இப்படி ஆசை வந்துவிட்டது ப்ரியா

    ReplyDelete
  3. நன்றி பவித்ரா.... உங்கள் வருகையும் கருத்துரையும் என்னை மிகவும் மகிழ வைக்கிறது.....

    ReplyDelete