முன்பே
திட்டமிட்டப்பட்டது தான்
என்றாலும்
சந்திக்கும் போது
உன் முகம் பார்த்து
சிதறிப் போகிறேன்....
சிதறிய என்னை
மீண்டும்
சேர்த்தெடுக்கும்
நேரம் முடியுமுன்பே
நீ
விடைபெறும்
நேரம் வந்துவிடுகிறது!
ஏதேதோ பேசியபடி
எதிரே நீ இருந்தாலும்
என்னெதிரே இல்லாத
வேறொரு உன்னைத்
தேடியபடி இருக்கிறது
என்
கண்கள்!
எத்தனையோ சிரமப்பட்டு
நீ
மறைத்து தான்
வைக்கிறாய்...
என்றாலும்
உன்னிலிருந்து நீ
அடிக்கடி
என்
கண்களில் படுகிறாய்..!
தலையசைத்தபடியே
நீ
போகும்போது
பார்க்கிற பார்வை
காதோடு சொல்லும்
கவிதையொன்று
விரைவில் வருமென்று!
எதிர்பார்த்தபடியே
வந்துசேரும்
கவிதைகளின்
வனப்பான வார்த்தைகளில்
மீண்டும்
என்னிடமிருந்து
மறைக்க முயன்ற
நீ...!!!
நன்றி: தினமலர் பெண்கள் மலர்
திட்டமிட்டப்பட்டது தான்
என்றாலும்
சந்திக்கும் போது
உன் முகம் பார்த்து
சிதறிப் போகிறேன்....
சிதறிய என்னை
மீண்டும்
சேர்த்தெடுக்கும்
நேரம் முடியுமுன்பே
நீ
விடைபெறும்
நேரம் வந்துவிடுகிறது!
ஏதேதோ பேசியபடி
எதிரே நீ இருந்தாலும்
என்னெதிரே இல்லாத
வேறொரு உன்னைத்
தேடியபடி இருக்கிறது
என்
கண்கள்!
எத்தனையோ சிரமப்பட்டு
நீ
மறைத்து தான்
வைக்கிறாய்...
என்றாலும்
உன்னிலிருந்து நீ
அடிக்கடி
என்
கண்களில் படுகிறாய்..!
தலையசைத்தபடியே
நீ
போகும்போது
பார்க்கிற பார்வை
காதோடு சொல்லும்
கவிதையொன்று
விரைவில் வருமென்று!
எதிர்பார்த்தபடியே
வந்துசேரும்
கவிதைகளின்
வனப்பான வார்த்தைகளில்
மீண்டும்
என்னிடமிருந்து
மறைக்க முயன்ற
நீ...!!!
நன்றி: தினமலர் பெண்கள் மலர்
ஏதேதோ பேசியபடி
ReplyDeleteஎதிரே நீ இருந்தாலும்
என்னெதிரே இல்லாத
வேறொரு உன்னைத்
தேடியபடி இருக்கிறது
என்
கண்கள்!
நுட்பமான அழகோடு மிளிர்கிறது கவிதை! தருகிறவர்களிடமே அதிகமாக எதிர்பார்க்கும் மனித இயல்போடு கேட்கிறேன் ப்ரியா... நிறைய தருக...தமிழுக்கும் எங்களுக்குமானதாக...
semmmmmaaaa....u r inspiring me...I should start writing more poems now...
ReplyDeleteநன்றி நிலா... உங்கள் பாராட்டுக்கள் என்னை இன்னும் எழுதத் தூண்டுகிறது..
ReplyDeleteரொம்ப ரொம்ப நன்றி அருண்... நீ கூட ரொம்ப அருமையாத் தான் எழுதறே. நிறைய எழுது அருண்.இது கொஞ்சம் பழைய கவிதை. இப்போ தான் வலைப் பதிவாகுது... 2009ல தினமலர் வாரமலரில் பிரசுரமானது...
ReplyDeleteகாதல் என்கிற வார்த்தை அரூபமாய் நுரைத்துக் கிடக்கும் இந்தக் கவிதையின் வரிகளும், காட்சியும் மயக்குகிறது. அகநானூறு தொடங்கிய அந்தக் காலத்திலிருந்து இன்றுவரை காதலை எழுதும் போது இந்தத் தூவல் தனித்துவமான ஆட்டம் ஆடத்தான் செய்கிறது. - சுகன்.
ReplyDelete@ சுகன்
ReplyDeleteஅந்த கவிதையை மிகச் சரியாக உள்வாங்கி விமர்சித்திருக்கிறீர்கள். எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு சுகன். "ஒரு முறை தான் காதல் வரும்" என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. வாழ்வின் பாதையில் அடிக்கடி நாம் காதல் வயப்படுகிறோம். காதலிக்கப் படுகிறோம். சமூகம் நமக்கு காதல் பற்றிச் சொல்லித் தந்திருக்கும், வரையறுத்து வைத்திருக்கும் விஷயங்கள் நம்மை போலித் தனமாய் வாழ வைக்கிறது என்பது தான் நிஜம். நான் காதலித்துக் கொண்டே இருக்கிறேன், காதலிக்கப்பட்டுக் கொண்டும் .....
நெஜமாவே நல்லா இருக்கு. தொட்டும் தொடாமலும், பட்டும் படாமலும், என்று சொல்லுற மாரி வர்த்தைகள ரொம்ப அழகா விளையாட விட்டிருக்க. சூபரப்பு
ReplyDeletekalaiyatha kanavum
ReplyDeletesollatha kadhalum
puriyatha kavithaiyum
endrume alaguthan
avalai mathiri