Thursday, December 23, 2010

கண்களில் நீ.........

ஊர் உறங்கும்
இரவு வேளைகளில்
உள்ளம் விழித்திருக்கும்
உன்னையே நினைத்தபடி.....


காற்றுப் புகாதபடி
நான்
போர்த்திக் கொண்டிருந்தாலும்

கள்வனைப் போல
உன் நினைவு
அருகே வந்து
ஓசையின்றி
படுத்துக் கொள்கிறது....




கண்களை மூடினால்
கனவுகளில் வந்து
தீப்பற்ற வைக்கிறாய்....~!
எதற்கு  வம்பென்று
தூங்காமல் நான்...




ஆனால்,
தூங்காமல் இருப்பதாலேயே
தீயாய் சுடுகின்ற
கண்களுக்குள்ளே
நீ மட்டும்
உருகாத பனிச் சிலையாய்......!

6 comments:

  1. தீயைச் சுடுகின்ற கண்களுக்குள்ளே-நீ மட்டும் உருகாக பனிச் சிலையாய்... எளிமையான அற்புதம். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. நன்றி ஹரணி....
    உங்கள் வருகையும் பதிவும் எனக்கு மிகுந்த மகிழ்வைத் தருகிறது... சுகனில் உங்கள் கவிதைகள் நிறைய வாசித்திருக்கிறேன்.....

    ReplyDelete
  3. துங்காமல் இருப்பதாலேயே தீயாய் சுடும் கண்களுக்குள் உருகாத பனிச்சிலையாய் நீ ... அட அழகான முரண்சுவை மிக ரசித்தேன் ப்ரியா

    ReplyDelete
  4. பாருங்க... நான் விட்டதை (என்)அவர் பிடித்துவிட்டார்!! நிம்மதியா தூங்குங்க... உருகி உருகி மனசை நிறைக்கட்டும்...!!!

    ReplyDelete
  5. அடடா, வசிஷ்டர் கையால் ப்ரம்ம ரிஷி பட்டம் வாங்கிய மாதிரில்ல இருக்கு பாரதி, நீங்க பாராட்டுனா.....

    ReplyDelete
  6. நன்றி நிலா..... உங்களைப் போல நல்ல நண்பர்கள் இருக்கும் போது நிம்மதியான தூக்கத்துக்கு என்ன குறை....

    ReplyDelete