Saturday, December 25, 2010

காத்திருப்பு....

என் வீட்டுத் தோட்டத்தில்
ஆயிரமாய் ரோஜாக்கள்
வாசத்துடன் பூத்திருக்கின்றன...
மனசென்னவோ
நீ
காதலுடன் தரப் போகும்

ஒற்றை ரோஜாவுக்காக
காத்திருக்கிறது....!

எப்போதும் என்னைச்சுற்றி
இன்னிசை
ஒலித்துக் கொண்டிருக்கிறது..
என்றாலும்
நீ
சொல்லப் போகும்
நான் உன்னை காதலிக்கிறேன்
என்ற பாடலுக்காகத் தான்
காதுகள் தவமிருக்கிறது....!

எத்தனையோ பொழுதுகளில்
தென்றல் என்னை
தீண்டிச் செல்கிறது..
ஆனாலும்
உன் விரல்கள்
தீண்டும்
அந்த வினாடிக்காகவே
என் உணர்வுகள் விழித்திருக்கிறது....!

மௌனத்தைக் கூட
மொழிபெயர்க்கத் தெரிந்தவனே....
உன் பெயரையே
இதயத்தின் ஒலியாக்கிக் கொண்டு
காதலுடன் காத்திருக்கிறேன்...
நீ
காதல் உணரும் நாளுக்காக....!

5 comments:

  1. நல்லா இருக்கு.( உண்மையச் சொன்னா உங்ககிட்ட இன்னும் நல்ல காத்திரமான கவிதைகள் எதிர்பாக்கின்றோம்)

    ReplyDelete
  2. நன்றி மரா, உங்கள் வருகைக்கும், பதிவுக்கும்....
    கொஞ்சம் சுமாராக இருந்தாலும் நம் கவிதையை தள்ளி விட மனம் வருவதில்லையே.... அப்படி தான் இது வலை பதிவாயிற்று. உங்கள் கருத்துக்கும், அதை மிக அழகாய் சொன்னதற்கும் நன்றி...

    ReplyDelete
  3. என்ன பிரியா... காதல் கவிதைகளையெல்லாம் பதிவாக்கி தொகுப்பாக்கிடும் யோசனை இருக்கோ...?! நீண்ட ஊர்ப் பயணத்துக்குப் பிறகான திரும்பலில் கதவு திறந்து மூட்டை முடிச்சுகளைக் கெடாசிய மறு நொடி அக்கம் பக்க நெருங்கிய தோழமைகளைக் கண்டு கொள்ளக் கிளம்பிவிடுவதைப் போல வந்துவிட்டேன் கணினிக்கு தற்காலிக மாற்று ஏற்பாட்டில்...

    ReplyDelete
  4. வாங்க நிலா..... உங்கள் வருகை இனிப்பாய் இருக்கிறது... நாம் அக்கம் பக்கத்து தோழிகள் தானே.....
    தொகுப்பாக்கும் அளவுக்கு சேர்ந்து தான் போயிருக்கிறது .
    ..... கவிதைகள் மட்டுமல்ல..... காதலும்

    ReplyDelete
  5. அழகான மென்மையான கவிதை .... சரி சரி ... கணவருடன் ஜாலி யா டூர் போனா இப்படித்தான் கவிதை வரும் மென்மையா ... உள்ளடக்கம் உண்மையாக இருக்கும் கவிதைகள் எல்லாம் .. எளிமை யானலும் வலிமையானவையே

    ReplyDelete