சில நாட்களுக்கு முன்னால் நண்பர் திரு இரா. எட்வின் அவர்கள் இந்தியாவின் மருத்துவர்கள் பற்றியும், மருந்துகள் விலைப் பற்றியும் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அரசு மருத்துவமனைகள் குறித்தும் ஒன்றிரண்டு வரிகள் அதில் வந்திருந்தன. பொதுவாகவே அரசு மருத்துவமனைகள் என்றால் கொஞ்சம் அலட்சியமும், அங்கே தவறுகள் தான் நடக்கும் என்றும் தான் மக்களாகிய நாம் சிந்திக்கிறோம். மேலே குறிப்பிட்ட கட்டுரையில் கூட, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை தனியார் மயமாக்கப் படுவதை எதிர்த்துத் தான் பேசியிருந்தார் எட்வின். அவர் வசிக்கும் பெர்ம்பலூரில் உள்ள அரசு மருத்துவமனைப் பற்றியோ, பணி புரியும் இடத்திலிருக்கும் அரசு மருத்துவமனைப் பற்றியோ சொல்ல ஒன்றுமில்லை அவருக்கு. சரி அவர் அரசியல் அவருக்கு.
Monday, September 17, 2012
Monday, August 20, 2012
ஆனந்தம்......
உங்கள் காலத்தில்
அலைபேசிகள் இல்லையா....
திரைப்படங்களை
வானொலியில் கேட்டீர்களா...
பள்ளி வாகனம் இல்லாமல்
எப்படி பள்ளிக்குப் போனீர்கள்..
கணிணிகள் இல்லாத வாழ்வு
கசப்பாயில்லையா
விதவிதமாய்
கேள்விக்கணைகள் வீசும்
என்
குட்டிக்கவிதையை
அணைத்தபடி சொன்னேன்..
நாங்கள்
அப்போது தான் இருந்தோம்
ஆனந்தமாய்....
அலைபேசிகள் இல்லையா....
திரைப்படங்களை
வானொலியில் கேட்டீர்களா...
பள்ளி வாகனம் இல்லாமல்
எப்படி பள்ளிக்குப் போனீர்கள்..
கணிணிகள் இல்லாத வாழ்வு
கசப்பாயில்லையா
விதவிதமாய்
கேள்விக்கணைகள் வீசும்
என்
குட்டிக்கவிதையை
அணைத்தபடி சொன்னேன்..
நாங்கள்
அப்போது தான் இருந்தோம்
ஆனந்தமாய்....
இயலாமை.....
கதவு சன்னலை
இறுக அடைத்து
திரைச்சீலைகளை
இழுத்துவிட்ட பின்பும்
உடை மாற்ற முடியவில்லை.....
சுவற்றில் இருந்து கொண்டு
சிரித்தபடி பார்க்கின்றனர்
சிவன் முருகன்
பெருமாள் பிள்ளையார்
இன்ன பிற ஆண்கள்.....
இறுக அடைத்து
திரைச்சீலைகளை
இழுத்துவிட்ட பின்பும்
உடை மாற்ற முடியவில்லை.....
சுவற்றில் இருந்து கொண்டு
சிரித்தபடி பார்க்கின்றனர்
சிவன் முருகன்
பெருமாள் பிள்ளையார்
இன்ன பிற ஆண்கள்.....
Thursday, April 19, 2012
நினைவுச் சாரல் குறித்து ஒரு பதிவுச் சாரல்
உலகின் ஆதியாக இருக்கிறாள் அம்மா. எந்த இனமானாலும் அம்மாவிலிருந்தே தொடங்குகிறது. கடல் நீரை உள்வாங்கி கருணை மழையாய் பொழியும் மேகம் போன்றவளா, எல்லா உயிரினமும் வாழ தன் மடி விரித்து மகிழ்ந்திருக்கும் பூமியைப் போன்றவளா? அம்மாவை விளக்கிச் சொல்ல வார்த்தைகள் ஏது? அம்மாவால் வளரும் எல்லா பிள்ளைகளும் வளர்ந்த பின் அம்மாவை நினைக்கிறார்கள். சிலர் மட்டுமே தமது செயல்களால் அம்மாவை உலகின் முன் நிலை நிறுத்துகிறார்கள்..மிகச் சிலரே ‘இப்படியொரு அம்மா நமக்கு வாய்க்கவில்லையே’ என்று ஒவ்வொருவரும் ஏங்கும் விதமாக மிகச் சிறப்பாக அம்மாவின் நினைவைப் பாடிப் பரவுகிறார்கள்.. சுகன் அம்மாவால் வளர்ந்தவர்., அம்மாவால் வாழ்கிறவர், அம்மாவால் நிலைத்திருக்கப் போகிறவர்.... ஒவ்வொரு வருடமும் அம்மாவின் நினைவு நாளை சடங்கு, சம்பிரதாயங்கள் என்னும் பாசாங்குகளில் மூழ்கிவிடாமல் இயல்பான இனிமையான இலக்கிய நிகழ்வாக்க் கொண்டாடும் சுகன் ஒரு முன்னுதாரணம்...
இந்த வருடம் 9.3.2012 அன்று மாலை எல்லா சுகன் நிகழ்வுகளையும் போலவே மிகச் சரியாக 6.30 மணிக்கு அம்மாவின் நினைவுச் சாரல் வீசத் தொடங்கிற்று....
Monday, January 23, 2012
Monday, December 12, 2011
இன்னும் இருக்கிறாள் அம்மா.....
(ஐ தமிழ் இணைய இதழில் வெளியான என் சிறுகதை இது.... இணைப்பு தந்தால் மட்டும் எப்படி? பதிவிடுங்கள் என்று என்னை செல்லமாய் வற்புறுத்தி என்னை பதிவிட வைத்த இனிய தோழி நிலா மகளுக்கு நன்றி......
இணைப்பும் சிறுகதையும் கீழே....)
http://issuu.com/itamil/docs/ithamil_november_2011/28
வெகு நாளைக்குப் பிறகு அன்று அந்த பிரிவுபச்சார விழாவில் ரேவதியைப் பார்த்தாள் இந்திரா... வாழ்வின் வேகமான ஓட்டத்தில் நண்பர்களை, உறவுகளை அடிக்கடிப் பார்ப்பது என்பது இயலாமல் போய்க் கொண்டிருக்கிறது...
இணைப்பும் சிறுகதையும் கீழே....)
http://issuu.com/itamil/docs/ithamil_november_2011/28
வெகு நாளைக்குப் பிறகு அன்று அந்த பிரிவுபச்சார விழாவில் ரேவதியைப் பார்த்தாள் இந்திரா... வாழ்வின் வேகமான ஓட்டத்தில் நண்பர்களை, உறவுகளை அடிக்கடிப் பார்ப்பது என்பது இயலாமல் போய்க் கொண்டிருக்கிறது...
Saturday, December 3, 2011
சிறுகதை
ஐ தமிழ் என்ற இணைய இதழில் என் சிறுகதை ஒன்று பிரசுரம் ஆகி யிருக்கிறது....
பக்கம் எண்
26 முதல் 30 வரை. ..... கீழே உள்ள இணைப்பில்
http://issuu.com/itamil/docs/ithamil_november_2011/28
Saturday, October 29, 2011
Friday, October 28, 2011
Monday, September 19, 2011
வெகு நாட்களாக எதுவும் எழுத முடியவில்லை
என்ற சோகத்தைத் தீர்க்க, பல வருடங்களுக்கு முன் நான் என் இரண்டாவது
பிரசவம் முடிந்து மகப்பேறு
விடுப்பில் இருந்த போது,
(இப்போது மகப்பேறு விடுப்பு ஆறு மாதம் ஆகியிருப்பது
எத்தனை பெரிய
ஆசுவாசம் என்பது
மூன்று மாத
மகப்பேறு விடுப்பை அனுபவித்த
என் போன்றவர்களுக்குப் புரியும்)
என் பிள்ளைகள் பெயரில் எழுதி குமுதம் சிநேகிதியில் வெளியான ஒரு கவிதை உங்கள் பார்வைக்கு........
Saturday, July 23, 2011
மொழியின் தீ......
ஒளிந்து கொள்கிறேன்
இந்த காதல் விளையாட்டில்
உன்னிடம் அகப்பட்டு விடக் கூடாதென்று......
என்றாலும்
சின்ன உதடுகளைத் திறந்து
நீ
செல்ல மொழிகளை உதிர்க்கையில்
தீப்பற்றிக் கொள்கிறது
என் அந்தப்புரம்..........
நன்றி; கல்கி வார இதழ்...
Thursday, July 7, 2011
ஊமை வலி........
கடிவாளத்தை இழுத்து குதிரையை நிறுத்துவதைப் போல என் வாகனத்தை மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தினேன். குதிரைப்பயணம் போல குதித்தபடி இரு சக்கர வாகனத்தில் தினமும் வருவதே உடம்பை வருத்தும் அசதியைத் தருகிறது...அன்று காலையிலேயே மருத்துவமனைக்கு வந்திருந்த மக்கள் கூட்டம் அதிகமாய் பெரிய வரிசையாய் நின்றிருந்தனர். அந்த கூட்டத்தை பார்த்தவுடன் என் உடல் வலி என்னை பயமுறுத்திற்று. ஆனாலும் வேறு வழியில்லை... இன்று கர்பவதிகளுக்கான சிறப்புப் பரிசோதனையும், மருத்துவமும் நடைபெறும் நாள். |
Sunday, June 19, 2011
அம்மா
அலுவலகத்திற்கும் வீட்டிற்குமாய்
ஓய்வில்லாது உழைத்து
அலுத்துக் களைத்துப் போகும்
எண்ணற்ற தருணங்களில்
எல்லோரிடமும்
சிடுசிடுக்கும் அம்மா
சீறுவதேயில்லை
பத்துப்பாத்திரம் தேய்க்கும்
பத்மாவிடம் மட்டும்....
களித்துச் சிரித்திருக்கும்
எங்களுக்கான நேரங்களில்
காரணம் கேட்டால்
வீட்டிலும் வெளியிலும்
அவளும் தான் தேய்கிறாள்
என்னைப் போலவே.....
பதில் சொல்லும்
அம்மாவின் கண்களில்
எப்போதும் தெரிகிறது நெருப்பு......
நன்றி: கவண் இதழ்..
Saturday, June 18, 2011
,
மரங்கள் வெட்டப் பட்ட அரளிகள் பூக்க முயற்சிக்கும்
மிக நீண்ட
சாலையொன்றில்
சூரியன் தகித்து இறங்கிக் கொண்டிருக்க
வெயிலால் சோர்ந்து நடந்து வந்தாள்
பொக்கை வாய் கிழவியொருத்தி...
தலைக் கவசம், இருக்கைக்கு துண்டு என்று
பறந்து வந்து கொண்டிருந்த
அந்த
இரு சக்கர வாகனம்
மெல்ல வேகம் குறைத்து
அவளை பின்னால் இருத்தியபடி
பயணத்தைத் தொடர்ந்தது....
வெயிலுக்கு பயந்து
எங்கோ ஒளிந்திருந்த
கடவுளும்
சேர்ந்து பயணித்தான்
அந்த தலைக் கவசத்துக்குள்
தன்னை மறைத்தபடியே.....
நன்றி: கல்கி வார இதழ்...
Thursday, June 16, 2011
அவளும், அவளும்.....
சரசரக்கும் பட்டுப்புடவை
பளபளக்கும் அணிகலன்கள்
விதவிதமாய் பூக்கள் என்று
அவளை
பகட்டாக அலங்கரித்து
அவள் அங்கே இருப்பதாக நம்பி
ஏதோ ஒரு விழா
கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்......
அவளோ
விழா முடிந்த பிறகு
நடக்கப்போகிற
அன்னதானத்திற்காய்
பசியோடு காத்திருக்கும்
பிள்ளைகளின் நடுவில்
ஓடி விளையாடுகிறாள்
பாவாடைச் சிறுமியாக......
நன்றி; கவண் இதழ்..
Tuesday, May 31, 2011
இன்று அமிர்தம் சூர்யாவின் வலைப்பூவைப் பார்த்தேன். அதில் என் மனம் கவர்ந்த ஒரு கவிதை உங்கள் பார்வைக்கு......

(வார்த்தையாயிருக்கும் ‘நெகட்டிவ் ஃபிலிம்’மை,
நீங்கள் வாழ்க்கையில் ‘பிரிண்ட்’ எடுத்துப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள் ஆல்பத்தை...)
படம்: ஒன்று
“ஏய் கருப்பி!
கருடன் சுத்தறான் உஷாராயிரு!
புள்ளைங்கள அந்தப்பக்கம் கூட்டிட்டுப் போடி”
பொரித்த குஞ்சுகளோடு குப்பையைக்
கிளரும் கருத்த கோழியோடு
பேசிக் கொண்டிருக்கிறாள் ஆயி.
படம்: இரண்டு
பாஞ்சாலி வேஷம் கட்டும்
கூத்துக்காரரின் காய்ச்சலுக்கு
கஷாயமும் கஞ்சியும்
கொடுத்தனுப்பியதைக் கண்டித்தபோது,
“கலை செத்த ஊர்ல
காலந்தள்ள முடியாதய்யா
வெறும் வயிறோடு நடிச்சா
பாஞ்சாலி வயிறு எரியுமில்ல” -
புத்தியில் சாந்தம் பூசினாள் ஆச்சி.
படம்: மூன்று
கோவில் தேர் பிரச்னையால்
கூடிய பஞ்சாயத்தில்
சொந்தமாய் தேர் செதுக்கும்
யோசனை, விதையாய் வீழ்ந்தபோது...
“ஏண்டா! உன் வயல்ல மழை பெய்ய
சொந்தமா மேகத்தை உனக்குன்னு செய்வீயா
பெய்யும் மழையை பொதுவாக்கப் பாருடா”
- முளைத்த நெருப்பின் துளிரை
பிடுங்கிப் போட்டாள் ஆயா.
படம்: நான்கு
துயர நீரில் மூழ்கியிருக்கும் தன் கண்களோடு
காத்தவராயன் மனைவிக்கு
சுகப்பிரசவம் முடித்து,
உரமாய் ஆசியை மனத்தில் தூவிவிட்டு...
மரித்த பேரனுக்காய் மார்பில் அடித்து அழ,
நடையை ஓட்டமாய் மாற்றுகிறாள் பாட்டி.
படம்:ஐந்து
“உருமாறுற தேவதைங்க
இப்ப ஏன் இல்ல?”
மடிமெத்தையில் தலை சாய்த்து
கதை கேட்கும் பேத்திக்கு
“இல்லேன்னு யார் சொன்னா
நீ... உங்கம்மா... நானு கூடத்தான்
தேவதை. மனுஷ ரூபத்தில் இருக்கோமில்லே?”
- அரக்க சாயலை அடியோடு
தூர்வாறுவாள் அப்பத்தா.
கடவுளின் ரேகையை
முகங்களில் சுருக்கங்களாய்
பதியமிட்டிருக்கும்
பழுத்த பெண்மையை -
ஆச்சி, ஆயி, ஆயா, பாட்டி,
அப்பத்தா... எப்படி அழைத்தாலும் சரி.
பூமியைச் சுழற்றி விடும்
சூட்சுமத்தை அவர்களிடம்
ஒரு கணமேனும்,
உணர்ந்ததுண்டா - ‘ஆம்’ எனில்
ஆல்பத்தை பார்த்துக் கொண்டிருக்கும்
நீ பாக்யவான்.
குறிப்பு: இப்போது உனது
குல தெய்வங்களை இதில் சேர்த்துக் கொள்ளலாம்.
- அமிர்தம் சூர்யா
(c) suryakalki@gmail.com தெளிவாயிட்டேன்
தஞ்சை நகரத்திலிருந்து சுமாராக ஒரு இருபது கிலோமீட்டர் தூரத்தில்
இருக்கும் அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் எனக்கு மருந்தாளுநராக
பணி. மருந்தாளுனர் என்றால் நோயாளிகளுக்கு மருந்து வழங்குவது
முதன்மையான பணி..... துணை நிலை பணி என்ன என்று கேட்டு விடக்
கூடாது, அது ஒரு பெரிய பட்டியல்.
சரி அதை விடுங்கள்.... நான் சொல்ல வந்த சேதியே வேறு.....
மருத்துவமனையில் அன்று நல்ல கூட்டம். வாரத்தில் ஒரு நாள் மட்டும்
இரத்தக் கொதிப்பு, நீரிழிவு நோய்க்கு என்று சிறப்பு மருத்துவமும்,
மருந்துகளும் வழங்கப் படும். அதை வாங்குவதற்காக
வருகின்ற மக்கள் கூட்டம். அன்று மட்டும் சுமாராக நானூறு பேராவது
வருவார்கள். நான் (மட்டும் தான்)பர பரப்பாக மருந்துகளை வழங்கிக்
கொண்டிருந்தேன். படிப்பறிவில்லாத வயதானவர்களே அதிகம் அந்த
கூட்டத்தில். இது இரத்தக் கொதிப்புக்கான மாத்திரை, இது சர்க்கரைக்கு,
இது சத்து மாத்திரை என்று சொல்லியபடியே கொடுத்துக்
கொண்டிருந்தேன். இடையில் மருத்துவர் அழைப்பதாக செய்தி வந்தது.
கூட்டத்தை நிற்க வைத்துவிட்டு அங்கே போனேன்.
"அம்மா, நீங்க இந்த பேஷண்ட்ஸ் கிட்டே, சக்கரை வியாதி, இரத்தக்
கொதிப்புன்னெல்லாம் சொல்லாதீங்க, இங்கே பாருங்க அவங்களுக்கு
புதுசா ஒரு வியாதி வந்துட்டதா நினச்சு என்கிட்டே வந்து கேள்வி
கேக்கறாங்க, பிரஷர், சுகர் அப்படின்னே சொல்லுங்க. அப்போ தான்
அவங்களுக்கு புரியும்" மிகவும் தீவிரமான முகத்தோடு சொன்னார்
மருத்துவர். எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. சரி
என்று சொல்லிவிட்டு வந்து என் பணியை தொடர்ந்தேன். "இது பிரஷர்
மாத்திரை, இது சத்து மாத்திரை, இது வலிக்கு" என்று சொல்லி கொடுத்த
என்னிடம் அந்த தாத்தா கேட்டார், "எப்போ சாப்பிடனும்மா? " " இந்த
மாத்திரை காலையில சாப்பிடுங்க, . இது ராத்திரிக்கு சாப்பிடுங்க "
கண்களை இடுக்கியபடி அவர் மறுபடி கேட்டார், "இது பகல்ல, இது நைட்டுக்கு , அப்படி தானே?"
எனக்கு இப்போதும் என்ன சொல்வதென்று தெரியவில்லை..... அடுத்து
வந்த நோயாளிகளிடம் எல்லாம் நான் தெளிவாக கூற ஆரம்பித்தேன்,
இந்த பிரஷர் மாத்திரை பகல்ல, சத்து மாத்திரை நைட்ல"
நான் தெளிவாயிட்டேன்..... அப்போ நீங்க....?
Monday, May 23, 2011
வேறு வேறு சிகரங்கள் .....
அருகருகே இருந்து கொண்டு
நாம்
பறக்கவிட்ட முத்தங்கள்
அறை முழுதும் வியாபித்து
எனை
வெட்கத்தில் நனைக்கிறன ....
விரல் கூட படாமல்
விழிகளால் நீ தீண்டிய
அங்கங்கள்
நிலவு வரும் நேரத்து
அல்லி மலராய்
மெல்ல விரிகின்றன....
என்
அனிச்சபூ இதழ்களில்
நீ
அழுத்தமாய் தருகின்ற
ஒரேயொரு முத்தமே
என்னை
சிகரமேற்றிவிடும் என்றால்
நம்ப மறுக்கிறாய்.....
சிகரம் தொட்டபிறகு
மூச்செடுக்கக் கூட
இடமோ நேரமோ
இல்லாத சூழலில்
எப்படி புரியவைப்பேன் உனக்கு.....
என் சிகரமும்
உன் சிகரமும்
வேறு வேறு வகையென்று........
நன்றி: சௌந்தர சுகன்
ஒதுங்குதல்...
பாக்கெட்டுக்களில் அடைத்த
பாலையும் தயிரையும்
வாங்கி ருசிக்கும் மக்கள்
மறந்தே போனார்கள்
அரிசி கழுவிய
உளுந்து களைந்த
கழனி நீருக்காக
வாசலில் வந்து நிற்கும் மாடுகளை.......
பொட்டல் திடலில்
காகிதங்களையும்
பிளாஸ்டிக் உறைகளையும்
மிச்சம் வைக்காமல்
தின்று முடிக்கும் மாடுகள்
நீருக்காக ஒதுங்குகின்றன
குடியிருப்புகளின்
கழிவு நீர் பாதைக்கருகில்.........
நன்றி: கல்கி வார இதழ்.
Subscribe to:
Posts (Atom)





